சிறியதாக்கப்படும் பாடுகள்
அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. – (பிலிப்பியர் 2:4)
.
ஒருமுன்னொரு காலத்தில் அரசன் ஒருவன் தன் நாட்டு மக்களிடம் சிக்கலான கேள்விகளை கேட்டு, அதற்கு பதிலளிக்கும் திறமைசாலிகளுக்கு பொன்னும், பொருளும் பரிசளித்து வந்தார். ஒருமுறை தன் சிங்காசனத்திற்கு முன் ஒரு கோடு ஒன்றை வரைந்து அதை தொடவோ, அழிக்கவோ செய்யாமல் அக்கோட்டை சிறியதாக்க வேண்டும் என்றார். கேட்டவர்கள் மிகவும் குழப்பமடைந்தனர்.
.
அவ்வரசனிடம் ஒரு மதிநுட்பம் நிறைந்த ஒரு மந்திரி இருந்தார். அவர் அரசனிடம் வந்து, ‘என்னால் இக்கோட்டை அழிக்காமல் சிறியதாக்க முடியும்’ என்றார். எல்லோரும் மிக ஆச்சரியமாய் இவர் என்ன செய்யப் போகிறார் என்று பார்த்து கொண்டிருந்தார்கள்.
.
அவர் ஒரு எழுதுகோலை எடுத்து அந்த கோட்டிற்கு அருகே ஒரு பெரிய கோட்டை வரைந்தார். பின்பு அரசனை நோக்கி, ‘அரசே, நான் வரைந்த பெரிய கோட்டினால் உங்கள் கோடு சிறியதாகி விட்டது பார்த்தீர்களா?’ என்றார். அரசர் அவரது மதிநுட்பத்தை பார்த்து வியந்து பரிசுப் பொருட்களை வாரி வழங்கினார்.
.
பிரியமானவர்களே, இந்த கதையிலிருந்த நாம் கற்று கொள்ள வேண்டிய ஒரு நல்ல கருத்து உண்டு. நமது அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் அநேக பிரச்சனைகள் உண்டு. நாம் நாள் முழுவதும் அவைகளையே சிந்தித்து கொண்டிருந்தால் அவைகள் எப்போதும் நமக்கு பெரியதாய்த்தான் தெரியும், ‘எனக்கு தலைவலிக்கிறது, என்னுடைய வியாதி மிகவும் பெரியது, நான் படுகிற கஷ்டம் தான் மிகவும் பெரியது, என் கணவருக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை, என் மகனுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை, என் மகளுக்கு இன்னும் வரன் கிடைக்க வில்லை, இன்றைக்கு தண்ணீர் வரவில்லை, வேலைக்காரி இரண்டு நாள் லீவ் என்று ஒரு தனி மனிதன் தான் சந்திக்கும் ஒவ்வொரு அசௌகளரியங்களையும் பிரச்சனையாக எண்ணி அடுக்கி கொண்டே போகலாம். பிரச்சனையில்லைத மனிதன் இவ்வுலகில் யாரும் இல்லையே! ஆனால் நமக்கு நமது பிரச்சனைதான் மிக பெரியதாக தோன்றும். என்னை போல கஷ்டப்படுகிறவர்கள் யாரும் அந்த உலகத்தில் இருக்க முடியாது. பாடு அனுபவிக்கவே நான் பிறந்தவன்’ என்று நாம் நம்மை குறித்தே எண்ணி சோர்ந்து போகிறவர்களாக காணப்படுகிறோம்.
.
அவ்வாறில்லாமல், நாம் சற்று பரந்த மனதோடு நம்மை தவிர நம்மை சுற்றியுள்ளவர்களையும் பார்க்க வேண்டும். தொலை காட்சியிலும், செய்தி தாளிலும் மக்கள் படும் அவதிகளை பார்க்க வேண்டும். விடுமுறை நாளில் அரசு மருத்துவமனைக்கு சென்று பிறந்து குழந்தை முதல் முதியவர் வரை சரீரத்தில் படும் பாடுகளை பார்க்க வேண்டும். பெரிய கோடு வரைந்தததால், முதல் கோடு சிறியதாக தோன்றியது போல பிறரது பிரச்சனைகளுடன் ஒப்பிடும்போது நமது பிரச்சனை சிறியதாக தோன்றும். நமக்குரிய நன்மைகளுக்காக நாம் நன்றியுள்ளவர்களாக மாறி விடுவோம்.
.
ஆகவே நம் குடும்பம், நம் வீடு, நான், எனக்கு என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளியே வருவோம்! திறந்த மனதோடும், பரந்த மனப்பாமையோடும், பிறரது சுக துக்கங்களில் பங்கெடுப்போம். கரிசனையாய் விசாரிப்போம். நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம். மற்றவர்களுக்காக ஜெபிப்போம். இவற்றை எல்லாம் செய்து விட்டு நாம் நமது பிரச்சனையை பார்ப்போமானால், அது சிறியதாகவும், மாறக்கூடியதாகவும் தோன்றும். ‘என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்’ என்று தேற்றுகிற தேவன் நம்மோடு இருக்கும்போது, நாம் எதை குறித்தும் கலங்க வேண்டியது இல்லையே! வேதம் கூறுவது போல ‘அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக’! ஆமென் அல்லேலூயா!
.
ஆயிரம் துன்பம் வந்தாலும்
அச்சம் எனக்கில்லையே
அரணும் கோட்டையும் அவர்
அனைத்தையும் தகர்த்திடுவாரே
.
எந்தன் இயேசு கைவிட மாட்டார்
என்னை மறந்திட மாட்டார்
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் எங்கள் பிரச்சனைகளை குறித்தே சிந்தித்தோமானால் அவை எப்போதும் எங்களுக்கு பெரியவைகளாகவே தோன்றுமே, அப்படி இல்லாமல், மற்றவர்களுடைய பிரச்சனைகளை நாங்கள் நோக்கும்போது, நீர் எங்களுக்கு பாராட்டியிருக்கிற கிருபைகள் எத்தனை பெரியது என்று உம்மை துதிக்க எங்களுக்கு ஏதுவாகுமே. அப்படிப்பட்டதான இருதயத்தை துன்பப்படுகிற ஒவ்வொருவருக்கும் கொடுப்பீராக. எங்களது தேவைகளில், வியாதிகளில் எங்களை தேற்றி, என் கிருபை உனக்கு போதும் என்று ஆறுதல் படுத்தும் தேவன் எங்களோடு இருப்பதால் நாங்கள் எதை குறித்தும் கவலைப்படாதிருக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.