வேறொரு சுவிசேஷம்
எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே. – (2 கொரிந்தியர் 11:4).
.
ஒருஅநேக கள்ள தீர்க்கதரிசிகளும், கள்ள போதகர்களும் எழும்பி சபையை சத்தியத்தை விட்டு விலக செய்து கொண்டிருக்கும் நாட்களில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சத்தியத்தை அறியாவிட்டால் அவர்கள் சொல்லும் போதகங்களை கேட்டு நிச்சயமாக கர்த்தரை விட்டு விலகி செல்லும் நிலை ஏற்படலாம்.
.
மேற்கண்ட வசனத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்தியருக்கு எழுதும் போது வேறொரு சுவிசேஷத்தை குறித்து எழுதுகிறார். அவர் வேறொரு இயேசுவை குறித்தும், பரிசுத்த ஆவியானவரல்லாத மற்ற ஆவியை குறித்தும் எழுதுகிறார். இங்கு அவர் குறிப்பிடும் வேறொரு சுவிசேஷம் என்பது என்ன?
.
அதற்கு பதிலும் அதே அதிகாரத்தில் 3ஆம் வசனத்தில் எழுதுகிறார். ‘ஆகிலும்,சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்’. கிறிஸ்துவை பற்றிய உண்மையினின்று விலக பண்ணுகிற எந்த காரியமும் ‘வேறொரு சுவிசேஷமே!
.
கிறிஸ்துவை பற்றிய உண்மை என்பது கிறிஸ்துவையே பிரசங்கிப்பது. இந்நாட்களில் அநேகர் கிறிஸ்துவை காட்டிலும், தங்களையே மேன்மைப்படுத்தி காட்டுகின்றனர். ‘நான் இப்படி ஊழியம் செய்தேன், இத்தனை நாடுகளுக்கு சென்றிருக்கிறேன், இத்தனை காரியங்களை செய்திருக்கிறேன்’ என்று கிறிஸ்துவை உயர்த்தாமல், தங்களையே உயர்த்தி காட்டுகின்றனர்.
.
அதை கேட்கும் ஆத்துமாக்கள், ஓ, இவர் கர்த்தரால் வல்லமையாக பயன்படுத்தப்படுகிறார் என்று தப்பு கணக்கு போடுகிறார்கள். சமீபத்தில் ஒரு ஊழியக்காரர் தான் நிற்கும் ஸ்டேஜில் இந்த பக்கத்திலிருந்து அந்த பக்கம் வேகமாய் ஓடுகிறார், ஸ்டேஜில் அங்குமிங்கும் ஓடி, வந்து நின்று, என் பாத்திரம் நிரம்பி வழிகிறது என்று கூச்சலிடுகிறார். இது என்ன சுவிசேஷம்! இதில் கர்த்தர் எங்கு மகிமைப்படுகிறார்? அதை அநேக ஊழியர்கள் மேடையில் அமர்ந்து கைத்தட்டி இரசித்து கொண்டிருக்கிறார்கள்! கிறிஸ்துவை மேன்மைப்படுத்தாத எந்த ஊழியரும் பிரசங்கிப்பது சுவிசேஷத்தையும், வேறொரு கிறிஸ்துவையும்தான்!!
.
சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, இந்த ஊழியர்களும் தங்களின் நயவசனப்பினால், தங்களின் வார்த்தைகளில் இருக்கும் கவர்ச்சியினால் வேதத்தை வாசித்து, சத்தியத்தை அறியாதிருக்கிறவர்களை கொள்ளை கொண்டு போய் விடுகிறார்கள். எப்படி ஒரு பறவை தனக்கு கண்ணி வைத்திருப்பது தெரியாமல் போய் மாட்டி கொள்கிறதோ அப்படி வேதத்தை அறியாதவர்கள் மாட்டி கொள்கிறார்கள்.
.
ஒரு ஊழியர் கிறிஸ்துவை பிரசங்கிக்காவிட்டால், அவர் எப்பேற்ப்பட்ட ஊழியராக இருக்கட்டும், அவரை புறம்பே தள்ளிவிடுங்கள்! பரலோகத்தில் தூதர்களின் துதிகளின் மத்தியில் துதிக்கப்பட்டும், பிதாவின் வலது பாரிசத்தில் இருக்கும் இடத்தையும் விட்டு, இவ்வுலகிற்கு வந்து, பாடுகளை பட்டு, சிலுவையில் தமது கடைசி சொட்டு இரத்தம் வரை சிந்தி, நமக்கு இலவசமாக இரட்சிப்பை வாங்கி கொடுத்தது இயேசுகிறிஸ்து தானே ஒழிய இவர்கள் இல்லை!
.
நமது இருதயமும், உணர்வுகளும் சத்திய வசனத்தில் நிரம்பி இருக்கட்டும்.’சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும்’ என்ற வார்த்தையின்படி, சத்தியத்தை அறிந்தால், இப்படிப்பட்டதான வேறொரு சுவிசேஷத்தை கொண்டு வரும் எந்த கள்ள தீர்க்கதரிசியின் போதகங்களுக்கும் தப்ப முடியும். உங்கள் மனதும் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன் என்ற பவுலின் பயம் நம்முடைய கிறிஸ்தவ சமுதாயத்தில் காணப்படாதபடி, எந்த வஞ்சக போதனைகளுக்கும், எந்த தந்திர போதனைகளும் நம்மை கிறிஸ்துவை விட்டும், அவருடைய உண்மையை விட்டும், அவருடைய மணவாட்டி சபையை விட்டும் நம்மை விலக செய்து விடாதபடி சத்தியத்தை நன்கு அறிந்தவர்களாக கர்த்தருக்குள் வளர தேவன் தாமே கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!
.
ஆவியில் நடக்கணுமே – தேவ
வார்த்தையில் நிலைக்கணுமே
தூய ஆவியே என்னை நிரப்பிடுமே
தேவ ஆவியே என்னை நடத்திடுமே
.
அப்போஸ்தலர்கள் நடந்த பாதையிலே
ஆதி சபையில் நடந்த கிரியை எல்லாம்
என்னில் வேண்டுமே என்றும் வேண்டுமே
ஆவியின் வரங்கள் இன்றே வேண்டுமே
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, வேறொரு சுவிசேஷத்திற்கும், வேறொரு இயேசுவுக்கும் செவி கொடுத்து, நாங்கள் உம்மை விட்டு விலகி சென்று விடாதபடி, சத்தியத்தில் நிலைக்கவும், பரிசுத்த ஆவியானவர் காட்டும் வழியில் சென்று உம்மையே பற்றி வாழவும் கிருபை செய்யும். எந்த கள்ள போதகங்களும் வஞ்சகங்களும் எங்களை உம்மை விட்டு விலக செய்து விடாதபடி, எச்சரிக்கையாய் வாழ உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.