விடுதலையாக்கும் தேவன்
சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். – (யோவான் 8:32,36).
டேல் கேலோவேய் (Dale Galloway) என்பவர் தாம் எழுதிய புத்தகத்தில், ஒரு சம்பவத்தை எழுதியிருந்தார். ஒரு நாள் அவர் ஆலயத்தில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தபோது அந்த பெரிய ஆலயத்தின் ஒரு திறந்த ஜன்னல் வழியாக ஒரு சிறு பறவை உள்ளே வந்தது. ஆலயத்தின் குறுக்கும் நெடுக்குமாக அந்த பறவை பறந்து திரிந்தது. பின்னர், சற்று நேரம் கழித்து, அது வெளியே போக முயற்சித்தது. அதற்காக அது சுற்றிலும் பறந்து வெளியே போகும் வழியை தேடியது. சற்று தாழ்வாக வந்துபோது, அந்த சகோதரன் அதை பிடிக்க முயற்சித்தார். ஆனால் அது மீண்டும் உயரே எழும்பி பறக்க ஆரம்பித்தது.
அவர் அந்த பறவை பறந்த இடத்திற்கெல்லாம், கூடவே சென்றார். ஆனால் அந்த பறவை அவர் கைகளில் சிக்காமல், தானே வெளியே போக வழியை தேடிக் கொண்டிருந்தது. கடைசியில் ஒரு வர்ணமிட்ட கண்ணாடி ஜன்னலில், அதுதான் வெளியே போகும் வழி என்று நினைத்து, அங்கு போய் மேலே வேகமாக மோதியபோது, அடிபட்டு கீழே விழுந்தது. அப்போது அதை கையில் எடுத்த அந்த சகோதரன், ‘நீ மட்டும் என்னை அனுமதித்திருந்தால், நான் எப்போதோ உன்னை விடுவித்திருப்பேன். ஆனால், நீயோ என் கையில் வராமல், உன் இஷ்டத்திற்கு பறந்து சென்றாய், கடைசியில் இதோ அடிபட்டு கீழே விழுந்து இப்போது என் கையில் கிடைத்திருக்கிறாய்’ எனக் கூறி ஜன்னலை திறந்து அதை வெளியே விட்டார். அது தன் செட்டைகளை அடித்து, விடுதலையோடு பறந்து சென்றது.
அப்போது அவர் சில வருடங்களுக்கு முன், தான் எப்படி உடைந்து போனவராக, குழப்பம் நிறைந்தவராக, என்ன செய்வது எங்கே செல்வது என்று திகைத்திருந்த வேளையில் கர்த்தரின் கரத்தில் விழுந்தபோது, அவர் அவருடைய இருதயத்தின் புண்களை காயம் கட்டி, அவரை பாவத்திலிருந்து விடுதலையாக்கி, அவர் அறியாத உயரத்தில் கொண்டுபோய் விட்ட தயவை நினைத்து கர்த்தரை துதிக்க ஆரம்பித்தார். நீங்களும் எங்கு செல்வது எப்படி பிரச்சனையிலிருந்து வெளியே வருவது என்று திகைத்து நிற்கிறீர்களோ? அந்த சிறு பறவையைப் போல பேதைகளாய், வழிதெரியாமல் திகைத்து முட்டி மோதி கொண்டிருக்கிறீர்களோ? யார் என் பிரச்சனையை தீர்ப்பார் என கலங்கி கொண்டிருக்கிறீர்களோ? குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். ஆமென், இயேசுகிறிஸ்து உங்கள் பிரச்சனைகளிலிருந்து உங்களை விடுவிக்க வல்லவர். நீங்கள் விசுவாசத்தோடு கர்த்தரை நோக்கி என் பிரச்சனைகளுக்கு பரிகாரி நீர்தான் ஆண்டவரே என்று அவரது கரங்களில் விழும்போது அவர் நிச்சயமாகவே பிரச்சனைகளுக்கு பரிகாரியாக இருந்து விடுதலையை தருவார்.
என் பிரச்சனையை தீர்க்க அந்த ஆண்டவன் வந்தாலும் முடியாது என்று சொல்கிறீர்களா? நம் இயேசுவால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. அன்று கானா ஊர் கல்யாணத்தில் திராட்சரசம் குறைவு பட்டபோது, வெறும் தண்ணீரை சுவையான திராட்சரசமாக மாற்றிய தேவன் நம் தேவனல்லவா? உங்கள் வாழ்க்கை வெறும் தண்ணீராக சுவையற்றதாக பயனற்றதாக இருக்கிறதா? அதை சுவை நிறைந்த ரசமாக மாற்ற தேவனால் மாத்திரமே கூடும். ஆமென் அல்லேலூயா! குறைவுகளை நிறைவாக்குகிற தேவன் நம் தேவன்! மோசே இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து மீட்டு வழி நடத்தி வந்த போது, அவர்களுக்கு முன்னால் சிவந்த சமுத்திரம் ஆரவாரத்தோடு அலையலையாய் அடித்து நின்றது. பின்னால், பார்வோனின் சேனைகள் அவர்களை பிடிக்க வேண்டும் என்று வெறியுடன் துரிதமாக தங்கள் இரதங்களை ஓட்டி வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு எந்த பக்கமும் செல்ல முடியாத நிலைமை! என்ன செய்வது என்று திகைத்த நேரத்தில் அவர்கள் கர்த்தரின் கரத்தில் விழுந்தார்கள். கர்த்தரை நோக்கி பார்த்தார்கள். கர்த்தர் அந்த ஆரவாரமான கடலில் வழியை திறந்தார். அவர்கள் உலர்ந்த தரையில் நடப்பது போல அந்த கடலின் நடுவே நடந்து கடந்து சென்றார்கள். அவர்களை துரத்தி வந்த பார்வோனின் சேனை அதே சிவந்த சமுத்தரத்தில் மூழ்கி மரித்தார்கள்! என்ன ஒரு அற்புதமான தேவன் நம் தேவன்! உங்கள் பிரச்சனைகளும் சிவந்த சமுத்திரம் போல எதிரிட்டு வந்தாலும் அதன் நடுவே தேவன் உங்களுக்கு வழியை திறப்பார்! உங்களுக்கு எதிராக வரும் சத்துருவின் எல்லா தந்திரங்களையும் முறியடிப்பார்! உங்கள் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்! உங்கள் பிரச்சனைகளிலிருந்து உங்களை நிச்சயமாகவே தேவன் தப்புவிப்பார்! ஆமென் அலலேலூயா!
எரியும் சூளையோ ஏழு மடங்கு எரிந்தாலும்
என் தேவன் தப்புவிக்க வல்லவர்
எரிகோ கோட்டையே தடையாய் நின்றாலும்
அதை இடித்து நொறுக்க தேவன் வல்லவர்
நான் ஆராதிக்கும் தேவன் இயேசு
என்னை தப்புவிக்க வல்லவர்
ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இப்போதும், தங்கள் பிரச்சனைகளிலிருந்து வெளி வர முடியாமல் தவிக்கிற ஒவ்வொருவருக்காகவும் இந்த வேளை ஜெபிக்கிறோம் அப்பா. அவர்களுடைய பிரச்சனைகளிலிருந்து அவர்களை விடுவித்தருளும். அவர்களுக்கு ஒரு அற்புதம் செய்து அவர்களை விடுவித்தருளும். உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லையே, எல்லாமே உம்மாலே ஆகும் தகப்பனே. தயவாய் இரங்கி அவர்கள் தேவைகளை சந்திப்பீராக. தங்கள் நம்பிக்கையை உம் மீது வைத்து அற்புதத்தை பெற்றுக்கொள்ள கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.