ஆத்துமாவிற்கு ஆறுதல்
என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; – சங்கீதம் – 43:5.
ஒரு பெரிய சுய சேவை பொருள் அங்காடி ஒனிறில் ஒரு பெண் தன்னுடைய மூன்று வயது சிறுமியுடன் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க வந்திருந்தாள். அங்குள்ள ஒவ்வொரு அலமாரியாக பார்த்து தனக்கு தேவையானவைகளை எடுத்து கையில் வைத்திருந்த கூடையில் சேகரித்துக் கொண்டே வந்தாள். அந்த சிறு குழந்தை கண்ணில் காணும் ஒவ்வொன்றையும் கேட்டு அழுதுகொண்டே வந்தது. இவற்றையெல்லாம் அங்கு பணிபுரியும் ஒரு நபர் பார்த்துக் கொண்டே இருந்தார்.
அவர்கள் பிஸ்கட்கள் அடுக்கி வைத்திருக்கும் பகுதிக்கு சென்றவுடன் அந்த குழந்தை பிஸ்கட் வேண்டுமென்று அடம்பிடித்தது. உடனடியாக அந்த பெண், அனித்தா அமைதியாக இரு. 10 நிமிடம் தான் பொறுத்துக் கொள் என்றாள். பின்பு சிறிது நேரம் கழித்து பொம்மைகளைக் கண்டவுடன் குழந்தை பொம்மை வேண்டுமென்று அழ ஆரம்பித்தது. உடனே, அனித்தா இன்னும் 5 நிமிடத்தில் நாம் வீட்டிற்கு கிளம்பி விடலாம், பொறுமையாக இரு என்றாள். கடைசியாக வாங்கிய பொருட்களுக்கு பில் போடும் இடத்திற்கு வந்தார்கள். அங்கு சாக்லேட் இருப்பதை அச்சிறுமி கண்டவுடன் சாக்லேட் வேண்டுமென்று ஓவென்று அழ ஆரம்பித்தாள். உடனே தாயார் ‘அனித்தா இதோ சாமான்களெல்லாம் வாங்கியாச்சி உடனே நாம் வீட்டிற்கு கிளம்பி விடலாம் வீட்டிற்கு போய் ஒரு சுகமான குட்டி தூக்கம் போடலாம், பொறுமையாய் இரு,’ என்றாள். இதைக் கவனித்துக் கொண்டே இருந்த அந்த நபர் அத்தாயாரை பார்த்து உங்கள் குழந்தை அனித்தா எவ்வளவு தொந்தரவு செய்தும் கோபப்படாமல், பொறுமையாகவும் கனிவாகவும் பேசி சமானித்து விட்டீர்களே என்று பாராட்டினார். அப் பெண் சிரித்துக் கொண்டே என் குழந்தையின் பெயர் மீனா என் பெயர் தான் அனித்தா, பொறுமையை இழந்துவிடாமலிருக்க நான் என்னிடம்தான் பேசிக் கொண்டேன் என்றார்.
பிரியமானவர்களே! வேதாகமத்தில் கூட தாவீது ராஜா மனம் கசந்து, சோர்ந்து போன நேரங்களில் தன்னை நோக்கி பேசி தன் ஆத்துமாவிற்கு ஆறுதல் சொல்வதைப் பார்க்கிறோம். சங்கீதம் 43:5-ல் ‘என் ஆத்துமாவே! நீ ஏன் கலங்குகிறாய்? தேவனை நோக்கி காத்திரு என்று தன் ஆத்துமாவைத் தேற்றுகிறார்.’
பொதுவாக பிறர் ஒரு கஷ்டத்திலிருக்கும் போது அவர்களுக்கு நாம் எளிதாக அறிவுரை கூறிவிடுகிறோம். ஆனால் அதே பிரச்சனை நமக்கு வரும்போது அறிவுரைகளை அப்பியாசப் படுத்துவது மிக கடினம். அப்படிப்பட்ட நேரங்களில் நம் ஆத்துமாவை பார்த்து அறிவுரை சொல்ல பழகிக் கொள்வது நல்லது. இதை செயல்படுத்திப் பாருங்கள். அது சோர்வுற்ற நேரத்தில் பெரிய உயிர் மீட்சியாய் இருக்கும். அதைப் போல பொறுமையிழக்க நேரிடும் சூழ்நிலையிலும், கோபத்தின் உச்சக்கட்டத்திலும் உங்களிடமே பேசி உங்கள் ஆத்துமாவை சாந்தப்படுத்திக் கொள்ளுங்கள். ஆமென் அல்லேலூயா!
கர்த்தருக்கு காத்திருந்து
கழுகு போல் பெலனடைந்து
செட்டைகளை அடித்து
உயரே எழும்பிடுவாய்
ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசித்து எங்கள் கன்மலையும் கோட்டையுமாகிய நல்ல தகப்பனே உம்மை துதிக்கிறோம். எங்களை உம்முடைய பாதத்தில் தாழ்த்துகிறோம். நாங்கள் கஷ்டத்தில் இருக்கும் போதும், எங்களுடைய சோதனை நேரங்களிலும் எங்களுக்கு பொறுமையை தாரும், எல்லா நேரங்களிலும் எங்களுடைய மனதை கட்டுப்படுத்த கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.