நினையாத நேரம்
மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள். – (மத்தேயு 25:13).
பிரசித்தி பெற்ற தேவ ஊழியர் திரு.டி.எல் மூடி அவர்கள் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரிய தவறு என்று ஒரு சம்பவத்தை விவரிக்கிறார். 1871-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ம் தேதி திரு. டி.எல் மூடி சிக்காகோவில் மிகப்பெரிய கூட்டத்திற்கு முன்னால் செய்தியை கொடுத்து கொண்டிருந்தார். அன்று அவர் பேசிய வசனம் ‘பிலாத்து மறுபடியும் அவர்களை நோக்கி: அப்படியானால், யூதருடைய ராஜாவென்று நீங்கள் சொல்லுகிறவனை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்’ – (மாற்கு 15: 12) என்பதாகும். மூடி அவர்கள் முடிப்பதற்கு முன், ‘அடுத்த வாரம் நாம் கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து தியானிக்க போகிறோம். அந்த சமயத்தில் நான் உங்களை கேட்பேன், இயேசுவை நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்று, அதற்காக தயாராக வாருங்கள்’ என்று சொல்லி ஜெபித்து அனுப்பி வைத்தார். அந்த இரவில் தானே, மிகப்பெரிய தீ அந்த நகரில் பற்றி எரிந்தது. அந்த நகரத்தில் முக்கால்பாகம் சாம்பலாய் போனது. அநேகர் மரித்துப் போயினர். அன்றிலிருந்து, ‘நான் எந்த ஆத்துமாவுக்கும் இரட்சிப்படைய ஒரு வார தவணை கொடுப்பதில்லை’ என்று மூடி அவர்கள் நடுக்கத்தோடு சொன்னார்கள்.
சமீப காலங்களில் எல்லா டெலிவிஷன் சேனல்களிலும், 2012 என்ற படத்தின் சில பாகங்களை காண்பித்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எந்த நோக்கத்தோடு அத்தனை மில்லியன் பணத்தை செலவழித்து, மிகப்பெரிய பயங்கரமான காட்சிகளை படமாக்கியிருக்கிறார்களோ தெரியவில்லை. ஆனால், வசனம் நமக்கு தெளிவாக சொல்கிறது, மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள் என்று. பிதா தவிர யாரும் அறியாதபடி அந்த நாழிகை இருக்கிறபடியால், நாம் எப்போதும் விழிப்புள்ளவர்களாக இருக்க வேண்டும். வேதத்தின்படி நாம் காரியங்களை கணிக்க வேண்டுமே தவிர, சிலர் சொல்வதுப்போல அல்ல. அவர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உண்மைக்கு புறம்பாக துணிந்து செய்வார்களானால் கர்த்தர் அவர்களுடைய நோக்கத்தை அறிவார்.
ஆனால் அதை பார்த்து நாம் பயப்படதேவையில்லை. நாம் கர்த்தரை ஏற்றுக்கொண்டிருந்தால் எந்த நேரத்தில் என்ன இந்த உலகத்தில் நடந்தாலும் நாம் கர்த்தருடைய பலத்த கரத்திற்குள் இருக்கிறோம். பரலோகராஜ்யம், தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தா ர்கள்.
புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக் கொண்டுபோகவில்லை. புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள்.
மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று. அப்பொழுது, அந்தச் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள்.
புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள். புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். அப்படியே அவர்கள் வாங்கிப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது. பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள். அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (மத்தேயு 25:1-12) .
கிறிஸ்து எந்த நேரத்தில் வருவார் என்று யாரும் அறியாதபடியால் நாம் விழித்திருக்க வேண்டும் என்பதற்கு மேற்கண்ட உவமையை கிறிஸ்து கூறுகிறார். மணவாளன் வரத் தாமதித்தபோது, அந்த பத்து கன்னிகைகளும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். இது நாம் அவர் வரும்போது நாம் இருக்கும் நிலைமையை குறிக்கிறது. ஒருவேளை நாம் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கலாம், அல்லது உறங்கி கொண்டோ சாப்பிட்டு கொண்டோ என்னவேண்டுமானாலும் செய்து கொண்டிருக்கலாம். ஆனால் நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாகும்போது அதை கேட்கும்படியாக நாம் விழித்திருக்க வேண்டும். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது.
ஆயத்தமில்லாதவர்களோ, தங்கள் தீவட்டிகளுக்கு எண்ணெய் ஊற்றிக் கொண்டு வந்து ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும்’ என்றார்கள். அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று மணவாளன் சொல்லுவார்.
சரி, நாம் எப்படி அவருடைய வருகைக்கு ஆயத்தப்படுவது? இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட்டு, கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்கள், பிதா குமாரன் பரிசுத்த நாமத்தில் ஞானஸ்நானம் பெற்று, பரிசுத்த ஆவியானவருடைய அபிஷேகத்தை பெற்று, வெற்றியின் ஜீவியம் செய்பவர்களே, கர்த்தருடைய வருகையில் புத்தியுள்ள கன்னிகைகளைப் போல ஆயத்தமாயிருக்கிறார்கள்.
கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதவர்கள் யாராயினும், அவர்கள் ஆயத்தப்படாதவர்களே! கிருபையின் காலம் முடிவடைந்த பின் வந்து எத்தனை தான் கதவை தட்டினாலும், கதவு திறக்கப்பட மாட்டாது.
அந்த சிக்காகோ நகரத்தின் தீ போல எதிர்பாராத நேரத்தில் மரணம் நம்மை சந்தித்தால், நாம் ஆயத்தமாயில்லாதிருந்தால், நம் ஆத்துமா எங்கே போகும் என்று ஒரு நிமிடம் நினைத்து பார்த்து, மனம் திரும்பும்படியாய் அழைக்கப்படுகிறீர்கள். நம் ஆத்துமாவின் இரட்சிப்பு மிகவும் விலையேற பெற்றது. அதை தீர்மானம் செய்யும் பொறுப்பு உங்களிடமே கொடுக்கப்பட்டுள்ளது. ‘நான் உலகத்தின் சந்தோஷத்தை அனுபவித்து பின் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று நினைத்தீர்களானால், நாளை உங்களுக்கு ஒருவேளை கொடுக்கப்படாவிட்டால் என்ன செய்வீர்கள்? இலவசமாய் கொடுக்கப்படும் அந்த விலையேற பெற்ற இரட்சிப்பை இன்றே ஏற்றுக் கொள்வீர்களாக! உங்களை இரட்சிக்க கூடாதபடிக்கு கர்த்தரின் கரங்கள் குறுகி போகவில்லை. இன்னும் நீட்டப்பட்டே இருக்கிறது. அந்த அன்பின் கரங்களுக்குள் தஞ்சம் புகுந்து விட உங்களை அழைக்கிறோம். யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; (மத்தேயு 11:12) நீங்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அப்படி விருமபுகிறவர்கள் கீழே காணும் ஜெபத்தை விசுவாசத்தோடு சொல்லுங்கள்.
ஜெபம்:
எங்கள் நல்ல தகப்பனே, நான் பாவம் செய்தேன் என்று அறிக்கையிடுகிறேன். என் பொல்லாத காரியங்களினால், நான் உம்மை விட்டு தூரம் போய் விட்டேன். இப்போதோ உம்மிடத்தில் திரும்புகிறேன். என் பாவங்களை மன்னித்து என்னை ஏற்றுக்கொள்ளும். உம்முடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என் பாவங்களுக்காக சிலுவையில் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிக்கிறேன். இயேசுவே என் இதயத்தில் வாரும் என்று அழைக்கிறேன். என் ஆண்டவராக என் இருதயத்தில் ஆளுகை செய்வீராக. நான் பரிசுத்த வாழ்க்கை வாழும்படியாக உம்முடைய சித்தத்தை செய்யும்படியாக உம்முடைய பரிசுத்த ஆவியை என்னில் நிரப்பும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள். – (மத்தேயு 25:13).
பிரசித்தி பெற்ற தேவ ஊழியர் திரு.டி.எல் மூடி அவர்கள் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரிய தவறு என்று ஒரு சம்பவத்தை விவரிக்கிறார். 1871-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ம் தேதி திரு. டி.எல் மூடி சிக்காகோவில் மிகப்பெரிய கூட்டத்திற்கு முன்னால் செய்தியை கொடுத்து கொண்டிருந்தார். அன்று அவர் பேசிய வசனம் ‘பிலாத்து மறுபடியும் அவர்களை நோக்கி: அப்படியானால், யூதருடைய ராஜாவென்று நீங்கள் சொல்லுகிறவனை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்’ – (மாற்கு 15: 12) என்பதாகும். மூடி அவர்கள் முடிப்பதற்கு முன், ‘அடுத்த வாரம் நாம் கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து தியானிக்க போகிறோம். அந்த சமயத்தில் நான் உங்களை கேட்பேன், இயேசுவை நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்று, அதற்காக தயாராக வாருங்கள்’ என்று சொல்லி ஜெபித்து அனுப்பி வைத்தார். அந்த இரவில் தானே, மிகப்பெரிய தீ அந்த நகரில் பற்றி எரிந்தது. அந்த நகரத்தில் முக்கால்பாகம் சாம்பலாய் போனது. அநேகர் மரித்துப் போயினர். அன்றிலிருந்து, ‘நான் எந்த ஆத்துமாவுக்கும் இரட்சிப்படைய ஒரு வார தவணை கொடுப்பதில்லை’ என்று மூடி அவர்கள் நடுக்கத்தோடு சொன்னார்கள்.
சமீப காலங்களில் எல்லா டெலிவிஷன் சேனல்களிலும், 2012 என்ற படத்தின் சில பாகங்களை காண்பித்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எந்த நோக்கத்தோடு அத்தனை மில்லியன் பணத்தை செலவழித்து, மிகப்பெரிய பயங்கரமான காட்சிகளை படமாக்கியிருக்கிறார்களோ தெரியவில்லை. ஆனால், வசனம் நமக்கு தெளிவாக சொல்கிறது, மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள் என்று. பிதா தவிர யாரும் அறியாதபடி அந்த நாழிகை இருக்கிறபடியால், நாம் எப்போதும் விழிப்புள்ளவர்களாக இருக்க வேண்டும். வேதத்தின்படி நாம் காரியங்களை கணிக்க வேண்டுமே தவிர, சிலர் சொல்வதுப்போல அல்ல. அவர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உண்மைக்கு புறம்பாக துணிந்து செய்வார்களானால் கர்த்தர் அவர்களுடைய நோக்கத்தை அறிவார்.
ஆனால் அதை பார்த்து நாம் பயப்படதேவையில்லை. நாம் கர்த்தரை ஏற்றுக்கொண்டிருந்தால் எந்த நேரத்தில் என்ன இந்த உலகத்தில் நடந்தாலும் நாம் கர்த்தருடைய பலத்த கரத்திற்குள் இருக்கிறோம். பரலோகராஜ்யம், தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தா