வேதம் வாழ்கிறது

வேதம் வாழ்கிறது

‘அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்

களே. மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது. கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்; உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே’. – (1பேதுரு 1:23-25).

தலைமுறை தலைமுறையாக மக்கள் வாழ்கின்றனர், மடிகின்றனர்ஆனாலும் வேதம் வாழ்கிறது இராஜ்யங்கள் எழும்பி இராஜ்யங்கள் மறைந்து போயினஆனாலும் வேதம் வாழ்கிறது இராஜாக்கள், சர்வாதிகாரிகள், ஆளுபவர்கள் வந்து மறைந்து போனார்கள்ஆனாலும்  வேதம் வாழ்கிறது வேதத்தை கிழித்தார்கள், எரித்தார்கள், தூஷித்தார்கள்ஆனாலும் வேதம் வாழ்கிறது வேதம் வெறுக்கப்பட்டு, சபிக்கப்பட்டு,  புறக்கணிக்கப்பட்டது ஆனாலும் வேதம் வாழ்கிறது வேதம் சந்தேகிக்கப்பட்டு, கிண்டலடிக்கப்பட்டு,நகையாடப்பட்

டது ஆனாலும் வேதம் வாழ்கிறது நாத்திகவாதிகளால் கண்டிக்கப்பட்டது ஆனாலும் வேதம் வாழ்கிறது தகுதியற்றது என்று பரியாசக்காரரால் புறக்கணிக்கப்பட்டது ஆனாலும்  வேதம் வாழ்கிறது எத்தனையோ ஆன்மீகவாதிகள் தோன்றி மறைந்தார்கள் ஆனாலும் வேதம் வாழ்கிறது வேதத்தினுடைய தனித்தன்மை மறுதலிக்கப்பட்டது ஆனாலும் வேதம் வாழ்கிறது நம்முடைய பாதங்களுக்கு தீபமாக இன்றும் வேதம் வாழ்கிறது நம்முடைய பாதைக்கு வெளிச்சமாக இன்றும் வேதம் வாழ்கிறது நாம் பரத்திற்கு செல்லும் வழியாக இன்றும் வேதம் வாழ்கிறது வாலிபருக்கு வழிகாட்டியாக இன்றும் வேதம் வாழ்கிறது வயோதிபருக்கு ஆறுதலாக இன்றும் வேதம் வாழ்கிறது ஆன்மீக பசியுள்ளோருக்கு உணவாக இன்றும் வேதம் வாழ்கிறது தாகத்தோடு இருப்பவருக்கு ஜீவத்தண்ணீராக இன்றும் வேதம் வாழ்கிறது களைத்திருப்போருக்கு இளைப்பாறுதலை கொடுக்கும்படியாக இன்றும் வேதம் வாழ்கிறது இருளில் இருப்போருக்கு வெளிச்சமாக இன்றும் வேதம் வாழ்கிறது பாவிகளுக்கு இரட்சிப்பை கொடுக்கத்தக்கதாக இன்றும் வேதம் வாழ்கிறது விசுவாசிகளுக்கு கிருபையை கொடுக்கத்தக்கதாக இன்றும் வேதம் வாழ்கிறது வேதத்தை வாசிப்பது இன்பம், தியானிப்பது அதைவிட இன்பம்! அனுதினமன்னா தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் போன்றது. ஆனால் வேதமோ தெவிட்டாத சுவையான உணவு.

தினமும் அந்த உணவை உண்போம், ருசிப்போம், நாள்முழுவதும் அதை தியானித்து, கர்த்தருக்குள் வளருவோம், நித்திய ஜீவனை பெற்று, பரலோகத்தில் வேத வார்த்தையாகிய கர்த்தரோடு என்றென்றும் வாழ்வோம், ஆமென் அல்லேலூயா!

ஜெபம்:

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான வேத வசனம் என்றும் வாழ்கிறதாய் இருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். எத்தனையோ பேர் அதை அழிக்க எத்தனித்தும் அழியாததாக, அநேகருக்கு வாழ்வை கொடுக்கிறதாய் இருக்கிற கர்த்தருடைய வார்த்தைகளுக்காக நன்றி செலுத்துகிறோம். எங்கள் ஜீவனாக, உணவாக, இளைப்பாறுதலை கொடுக்கிற தேவ வார்த்தைகளாக இருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். காலத்தால் அழியாத தலைமுறை தலைமுறையாக எங்களை வாழ்விக்கிற கிருபையுள்ள வார்த்தைகளுக்காக நன்றி செலுத்தி, எங்கள் துதி ஸ்தோத்திரங்களை உமக்கே ஏறெடுக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல தகப்பனே ஆமென்.