உன்னுடைய தனிப்பட்ட அவசர தேவைக்கு
“நம்முடைய தனிப்பட்ட குடும்ப, பொது வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் கண்டிப்பாக தீர்வு உண்டு”.
கிறிஸ்தவர்களின் வேதமான “பைபிள்” எனப்படும் பரிசுத்த வேதத்தில் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லப்பட்டுள்ளது. அவைகளை உங்களுக்கென இங்கு தொகுத்து தந்துள்ளோம். ஒரு வேளை உங்களிடம் பரிசுத்த வேதம் இல்லை என்றால் அருகில் இருக்கும் ஒரு கிறிஸ்தவரையோ அல்லது திருச்சபையையோ(சர்ச்) அனுகி பெற்றுக்கொள்ளுங்கள். இவைகளை வாசித்து கடைபிடிப்பதன் மூலம், நிச்சயமாகவே உங்களுடைய தேவைகள் சந்திக்கப்படும்.
1. துக்கத்தால் துவண்டு விட்டீர்களா? – நீங்கள் வாசிக்க வேண்டிய வேதப்பகுதி – யோவான் 14-ம் அதிகாரம்.
2. துக்கத்தால் தூக்கமில்லையோ? – சங்கீதம் 4:4-8.
3. நம்பியவர்கள் கைவிட்டனரோ? – சங்கீதம் 27.
4. அனைவரும் விரும்பும் வாழ்வு வேண்டுமா? – யோவான் 15.
5. பாவபாரம் உங்களை கஷ்டப்படுத்துகிறதோ? – சங்கீதம் 51.
6. கவலையினால் கண்ணீர் வடிக்கிறீர்களோ? – மத்தேயு 6:19-34.
7. அபாயத்திற்குள் அகப்பட்டு விட்டீர்களோ? – சங்கீதம் 91.
8. கடவுள் உங்களுக்கு தூரமாகி விட்டாரோ? – சங்கீதம் 139.
9. தனிமையில் தவிப்பா? பயத்தால் பதட்டமா? – சங்கீதம் 23.
10. கசப்பான உணர்வுகளால் கட்டப்பட்டு விட்டீர்களா? – 1 கொரிந்தியர் 13.
11. அமைதியும் ஆனந்தமும் அடைய வேண்டுமா? – மத்தேயு 11:25-30.
12. கடவுளை விடவும் உலகம் முக்கியமாகத் தெரிகிறதா? – சங்கீதம் 90.
13. உங்கள் பயணத்தில் பாதுகாப்பு வேண்டுமா? – சங்கீதம் 121.
14. புதியதொரு சாதனைக்கு ஆயத்தப்படுகிறீர்களா? – ஏசாயா 55.
15. எடுத்த காரியத்தை செய்து முடிக்க வேண்டுமா? – சங்கீதம் 121.
16. உங்களுடன் ஒத்துழைக்க ஒரு நபர் தேவையா? – ரோமர் 12.
17. உரவு செலவுகளைக் குறித்து ஆலோசனை அவசியமா? – மாற்கு 10.
18. மன அழுத்தம் எல்லை மீறி தொல்லை கொடுக்கிறதா? – சங்கீதம் 27.
19. மனித தயவுகள் மண்ணில் புதைந்து விட்டதோ? – 1 கொரிந்தியர் 13.
20. நேசமற்ற மக்களால் நேருக்கப்படுகிறீர்களோ? – யோவான் 15.
21. விருப்பமில்லா வேலையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறாயா? – சங்கீதம் 26.
22. உன்னுடைய உலகம் சுருங்கிவிட்டதாக எண்ணுகிறாயா? – சங்கீதம் 19.
23. ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற விரக்தியா? – சங்கீதம் 103