தேவனின் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள
1. கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களை தேவன் ஆசீர்வதிப்பார். சங் 115:3.
2. உண்மையுள்ள மனுஷன் பரிபூரான ஆசீர்வாதங்களை பெறுவான். நீதி 28:20.
3. கருணைக் கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான். நீதி 22:9.
4. கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவன் கர்த்தரால் ஆசீர்வாதம் பெறுவான். சங் 24:4,5.
5. நீதிமானின் சந்ததி ஆசீர்வதிக்கப்படும். சங் 37:25,26
6. செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும். சங் 112:2
சுருக்கமாக சொல்ல வேடுமானால் நாம் தேவனுக்கு பிரியமாய் நடந்து நீதிமான்களாயும் செம்மையானவர்களாயும் இருந்து அவருடைய கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடப்போமானால், கண்டிப்பாக நாம் மட்டுமல்ல, நம்முடைய வம்சமே தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். இந்த நாளில் நம்மை நாமே இந்த வார்த்தைகளுக்கு ஒப்புகொடுத்து நடந்தால், நிச்சயமாக ஒரு மாறுதல் காண்போம்.