நீ தேடும் நிம்மதி

நீ தேடும் நிம்மதி

நண்பரே உமக்கு அன்பின் வணக்கம்.
நீங்கள் ஒரு வேளை பலவிதமான பிரச்சனைகளால் நிம்மதியில்லாமல் இருப்பவரானால், மன-அமைதியில்லாமல் இருப்பவரானால், உலக கவலையினால் கஷ்டப்படுபவரானால், சமாதானம் இல்லாமல் அதைத்தேடி சினிமா, கடற்கரை, பூங்கா, குடிவெறி போன்ற காரியங்களில் ஈடுபடுவரானால் உங்களுக்காகவே இந்த கைப்பிரதி கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு சமாதானத்தின் வழியை காட்டவே இந்தகைப்பிரதி உங்களை தேடி வந்துள்ளது.
அன்பரே, மனிதர்களிக்கு மெய் சமாதானம், மன-அமைதி, நிம்மதி இல்லாமல் போவதற்கு மூலக்காரணம் என்ன என்று கண்டுபிடித்து அதை சரிச்செய்தால் மாத்திரமே, மனிதர்களால் இவைகளை அனுபவிக்க முடியும்.
இந்த மூலக்காரணம் என்னவென்று தெரியுமா? இன்று அனைவராலும் சாதாரணமாக கருதப்படும் பாவம் என்கிற குற்றமே.
ஆம் இது உண்மைதான். பாவம் என்பது குப்பையை போன்றது. குப்பை நம் வீட்டுக்குள் இருந்தால் எப்படி நன்றாய் இராதோ, அப்படியே பாவம் நம் மனதில் இருந்தால் மன அமைதியோ மனதிற்கு சமாதானமோ இருக்க முடியாது.
குடி திருட்டு, கோபம், வெறி, ஏமாற்றுதல், பொய், சண்டை, பெருமை, பொறாமை, விபச்சாரம், ஆபாசம், கொலை, பழிவாங்குதல், எரிச்சல், தவறான உறவு, கள்ளத்தராசு… போன்ற அனைத்துமே பாவங்கள் என்று வேதம் நமக்கு கற்பிக்கிறது. இவைகளில் எதாவது ஒன்று உங்களிடம் இருந்தாலும், உங்களுக்க்கு சமாதானமோ நிம்மதியோ இருக்காது.
இந்த மூலக்காரணத்தை நாம் உணர்ந்து சரிசெய்தால் தான் நாம் ஆசைப்படும், சமாதானம், நிம்மதி, மன-அமைதி எல்லாம் கிடைக்கும்.
இதை எப்படி சரிச்செய்வது? பாவப்பரிகாரம் ஒன்றுதான் வழி. அதுவும் நீங்கள் செய்ய வேண்டியதில்லை. உங்களுக்காகவே வேறொருவர் இந்த பாவபரிகாரத்தை செய்துள்ளார். அவர்தான் பாவ இரட்சகராகிய இயேசு கிறிஸ்து. இந்த இயேசு உங்களுடைய பாவங்களுக்காக சிலுவையில் அடிக்கப்பட்டார், சிறுமைப்படுத்தப்பட்டார், நொறுக்கப்பட்டார். அவமானப்படுத்தப்பட்டார்.
உங்களுடைய பாவதிற்கு பரிகாரமாக இயேசு தன்னையே இரத்தபலியாக சிலுவையில் ஒப்புகொடுத்தார்.
ஆகையால் தான் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் இன்றும் சகலப்பாவங்களையும் கழுவி சுத்திகரித்து வருகிறது. அன்பரே நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். உங்கள் பாவங்களை இயேசுவிடம் சொல்லி அறிக்கைச்செய்து விட்டு விடுங்கள் அவர் உங்கள் பாவங்களை கழுவி சுத்திகரிப்பார். உங்களை மெய்யான சமாதானத்தினால் நிரப்புவார். நீங்கள் மன அமைதியும் நிம்மதியும் அடைவீர்கள்.
உங்கள் தேவைகள் ஒவ்வொன்றையும் சந்தித்து ஆசீர்வதித்து அதிசயமாய் நடத்துவார். இப்பொழுது உண்மையான நிம்மதியை பெற்றுக்கொள்ளா நீங்கள் ஆயத்தமா? இயேசுவிடம் சொல்லிப்பாருங்கள் அற்புதத்தை காண்பீர்கள்.