உன் நம்பிக்கை வீண் போகாது
உனக்காக ஒருவர் இருக்கிறார் அவர் மீது நீ நம்பிக்கை வைத்தால் நீச்சயமாகவே உன் பிரச்சனைகளுக்கு முடிவு உண்டு. உன் நம்பிக்கை வீண் போகாது.
1. மனிதனை நம்புவதை பார்க்கிலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே நம்பி இருப்பது நலம் – (சங் 118:8).
2. உன் நம்பிக்கை எப்போழுதும் கர்த்தர்மேல் இருக்கும்படி இன்றைய தினம் இக்கைபிரதி மூலம் உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம் – (நீதி 22:19).
3. உன் முழு இருதயத்தோடு அவர் மேலும் அவருடைய வார்த்தையின் மேலும் நம்பிக்கையாயிரு – (நீதி 3:5; சங் 130:5).
4. உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே உன் காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் – (சங்கீதம் 37:5).
5. ஆண்டவராகிய இயேசுவையே உன் நோக்கமும் நம்பிக்கையுமாய் வைத்துக்கொள் – (சங் 71:5).
6. தயவையும் நியாயத்தையும் செயலில் காட்டி இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு – (ஒசி 12:6).
7. உன் விடுதலைக்காக நம்பிக்கையோடே காத்திரு (புல 3:26).
8. நீ இயேசுவினிடத்தில் வைத்திருக்கும் நம்பிக்கையை எப்பொழுது உன் வாயினால் அறிக்கையிட்டு கொண்டிரு (எபி 10:23).
9. இயேசுவின் மேலுள்ள நம்பிக்கையை முடிவு பரியந்தம் உறுதியாய் பற்றிக்கொண்டிரு – (எபி 3:14).
மேற்கண்டபடி நீ தொடர்ந்து செய்து வருவாயானால் கீழ்கண்ட சகல ஆசீர்வாதங்களும் உனக்கு கிடைக்கும்…
1. உனக்கு சந்தோஷம் உண்டாகும்; தேவன் உன்னைக் காப்பாற்றுவார் – சங்கீதம் 5:11.
2. அவரே உனக்கு கேடகமாய் இருப்பார் – சங் 18:30.
3. நீ எந்த காரியத்திலும் தள்ளாடுவதில்லை – சங் 26:1.
4. தேவனுடைய கிருபை உன்னை சூழ்ந்துக்கொள்ளும் – சங் 32:10.
5. நீ பாக்கியவானாய் இருப்பாய் – சங் 34:8, எரே 17:7.
6. உன் மேல் குற்றம் சுமராது – சங் 34:22.
7. உனக்கு பயம் வராது – சங் 56:4.
8. நீ வெட்கப்பட்டு போவதில்லை – சங் 71:1.
9. அவரே உனக்கு அடைக்கலமும், கோட்டையும், கன்மலையும், தேவனுமாய் இருப்பார் – சங் 91:2, 94:22.
10. நீ என்றென்றைக்கும் அசையாமல் இருப்பாய் – சங் 125:1.
11. உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார் – நீதி 3:26.
12. நீ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவாய் – நீதி 29:25.
13. உன்னை சமாதானத்துடன் காத்துக்கொள்வார் – ஏசா 26:3.
14. நீ நடக்க வேண்டிய வழியை உனக்கு காட்டுவார் – சங் 143:8.
15. உன்னுடைய எல்லா பிரச்சனைகளுக்கும் நிச்சயமாகவே உண்டு. உன் நம்பிக்கை வீண் போகாது. ஜெயம் உனக்கே – நீதி 23:18.