நீதிமானுக்கு கிடைக்கும் நன்மைகள்

நீதிமானுக்கு கிடைக்கும் நன்மைகள்

  1. நீதிமான்களுக்கு என்று தேவன் மெய் ஞானத்தை வைத்திருக்கிறார். – நீதி 2:7.
  2. நீதிமான்களுடன் தேவனுடைய இரகசியம் இருக்கிறது – நீதி 3:32.
  3. நீதிமான்களுடன் வாசஸ்தலத்தை (வீட்டை)தேவன் ஆசீர்வதிக்கிறார் – நீதி 3:33.
  4. நீதிமான்களுடைய பாதை/வழி நடுப்பகல் வரைக்கும் அதிகமதிகமாய் பிரகாசிக்கிற சூரிய பிரகாசம் போலிருக்கும் – நீதி 4:18.
  5. தேவன் நீதிமான்களுக்கு பசியினால் வருந்த விடார் – நீதி 10:3.
  6. நீதிமான்களுடைய தலையின் மேல் ஆசீர்வாதங்கள் தங்கும் – நீதி 10:6.
  7. நீதிமான்களுடைய பேர் புகழ் பெற்று விளங்கும் – நீதி 10:7.
  8. நீதிமானுடைய வாய் ஜீவ ஊற்று – நீதி 10:11.
  9. நீதிமானுடைய பிரயாசம் ஜீவனை பிறப்பிக்கும் – நீதி 10:16.
  10. நீதிமானுடைய நாவு சுத்த வெள்ளியைப் போன்றது – நீதி 10:20.
  11. நீதிமானுடைய உதடுகள் அநேகரை போஷிக்கும் – நீதி 10:21.
  12. நீதிமானுக்கு அவன் விரும்புகிற காரியம் கொடுக்கப்படும் – நீதி 10:24.
  13. நீதிமானுக்கு நித்திய அஸ்திபாரம் உள்ளவனாய் இருப்பான் – நீதி 10:25.
  14. நீதிமான்களுடைய நம்பிக்கை மகிழ்ச்சியைக் கொடுக்கும் – நீதி 10:28.
  15. நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை – நீதி 10:30.
  16. நீதிமானுடைய வாய் ஞானத்தை பேசும் – நீதி 10:31.
  17. நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளை பேச அறிந்து இருக்கும் – நீதி 10:32.
  18. நீதிமான் இக்கட்டிலிருந்து விடுவிக்கப் படுவான் – நீதி 11:8.
  19. நீதிமான் தன் அறிவினால் தப்புவான் – நீதி 11:9.
  20. நீதிமான்கள் நன்றாய் இருந்தால் பட்டணம் மகிழ்ச்சியாய் இருக்கும் – நீதி 11:10.
  21. நீதிமான்களுடைய ஆசை நன்மையாய் இருக்கும் – நீதி 11:23.
  22. நீதிமான்கள் துளிரைப் போல தழைப்பார்கள் – நீதி 11:28.
  23. நீதிமான் ஜீவ விருட்சத்தை பலனாக பெறுவான் – நீதி 11:30.
  24. நீதிமான்களுடைய வேர் அசையாமல் இருக்கும் – நீதி 12:3.
  25. நீதிமான்களுடைய வீடு நிலைத்து நிற்கும் – நீதி 12:7.
  26. நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும் – நீதி 12:12.
  27. நீதிமான் தன் நெருகத்திலிருந்து நூங்குவான் – நீதி 12:13.
  28. நீதிமானுக்கு ஒரு தீங்கும் வராது – நீதி 12:21.
  29. நீதிமான் தன் அருகில் இருப்பவனைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவன் – நீதி 12:26.
  30. நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷத்தை கொடுக்கும் – நீதி 13:9.
  31. நீதிமான் தனக்கு திருப்தியாகும் மட்டும் புசிப்பான் – நீதி 13:25.
  32. நீதிமான் தன் மரணக் காலத்திலே நித்தியத்தை (மோட்சம்) குறித்த நம்பிக்கை உள்ளவனாய் இருப்பான் – நீதி 14:32.
  33. நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு – நீதி 15:6.
  34. நீதிமானுடைய வழி/பாதை, ராஜ பாதை – நீதி 15:19.
  35. நீதிமானுடைய மனம் பதில் சொல்ல யோசிக்கும் – நீதி 15:28.
  36. நீதிமான்களுடைய ஜெபத்தை தேவன் கேட்கிறார் – நீதி 15:29.
  37. நீதிமானுக்கு நியாய தீர்ப்பது சந்தோஷமாய் இருக்கும் – நீதி 21:15.
  38. நீதிமான் கஞ்சத்தனம் இல்லாமல் கொடுப்பான் – நீதி 21:26.
  39. நீதிமானுடைய தகப்பன் மிகவும் மகிழ்ச்சியாய் இருப்பான் – நீதி 23:26.
  40. நீதிமான் ஏழு தரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான் – நீதி 24:16.
  41. நீதிமான்கள் சிங்கத்தைப் போல் தைரியமாய் இருப்பார்கள் – நீதி 28:1.
  42. நீதிமான்கள் மகிழ்ச்சியாய் இருக்கும் போது மகா கொண்டாட்டம் உண்டாகும் – நீதி 28:12.
  43. நீதிமான்கள் பெருகினால் ஜனங்கள் சந்தோஷப் படுவார்கள் – நீதி 29:2.
  44. நீதிமான் பாடி மகிழுவான் – நீதி 29:6