சிலுவையில் இயேசு கிறிஸ்து பேசின ஏழு வார்த்தைகள்
1. பிதாவே ! இவர்களுக்கு மன்னியும் – லூக் 23:34.
2. இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசியிலிருப்பாய் – லூக் 23:40-43.
3. அதோ உன் மகன், அதோ உன் தாய் – யோவா 19:26,17.
4. என் தேவனே, என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் ? – மத் 27:45,46; மாற் 15:34.
5. தாகமாயிருக்கிறேன் – யோவா 19:28.
6. முடிந்தது – யோவா 19:30.
7. பிதாவே ! உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் – லூக் 23:46.
இந்த 7 வார்த்தைகளை பேசின நோக்கம்:
1. முதல் வார்த்தையில், இயேசு தம்முடைய சத்துருக்களுக்காக பிதாவிடம் பரிந்து பேசினார் – லூக் 23:34.
2. இரண்டாவது வார்த்தையில், இயேசு மனந்திரும்பின கள்ளனுக்காகப் பேசினார் – லூக் 23:40-43.
3. மூன்றவது வார்த்தையில், இயேசு தன் தாயாகிய மரியாளுக்காக பேசினார் – யோவா 19:26,27.
4. நான்காவது வார்த்தையில், இயேசு உலக மனிதர்களின் பாவங்கள் அனைத்தும் தன் மேல் வரும் நேரத்தில் தன்னைவிட்டு எடுப்பட்டதன் பிதாவின் பிரசன்னத்திற்காய் பேசினார் – மத் 27:45,46.
5. ஐந்தாவது வார்த்தையில், இயேசு தன்னுடைய ஆவிக்குரிய தேவையைக்குறித்து மனிதகுலத்தின் ஆத்தும இரட்சிப்பின் திட்டத்தைக்குறித்து பேசினார் – யோவா 19:28.
6. ஆறாவது வார்த்தையில், இயேசு தான் பூமிக்கு மனிதனாய் பிறந்த நோக்கத்தை, பிதாவின் அநாதி திட்டத்தை முடித்ததை குறித்து பேசினார் – யோவா 19:30.
7. ஏழாவது வார்த்தையில், இயேசு மனிதகுலத்திற்காய், அவர்களின் பாவபரிகாரியாய் தன்னையே ஜீவ பலியாக ஒப்புகொடுத்து மரித்தார் – லூக் 23:46.