விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை
….
உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களில் போர்செய்கிற இச்சைகளினாலல்லவா? – (யாக்கோபு 4:1) .
.
ஆபிரகாமிற்கு எழுபத்தைந்து வயதாக இருக்கும்போது, தேவன் அவரிடம், ‘உன் தேசத்தையும், இனத்தையும் தகப்பன் வீட்டையும் விட்டு புறப்படு’ என்று கட்டளையிட்டார். இந்த கட்டளைக்கு கீழ்ப்படிந்து அவர் தன் மனைவியுடன் புறப்பட்டார். தன்னோடு தனது தம்பி மகனாகிய லோத்துவின் குடும்பத்தையும் கூட்டி செல்கிறார். தன் தம்பி இறந்த பின்பு லோத்துவை தன் மகனை போல பாவித்து ஆபிரகாம் அன்பு செலுத்தியிருக்க வேண்டும். ஆகவே தான் லோத்துவை விட்டுச்செல்ல மனமின்றி தன்னோடு அழைத்து செல்கிறார். அவர்கள் சென்ற இடத்தில் பூமி தாங்க கூடாத அளவிற்கு அவர்களுடைய ஆஸ்தி பெருகிற்று.
.
இந்த சூழ்நிலையில் ஆபிரகாமின் வேலைக்காரர்களுக்கும், லோத்துவின் வேலைக்காரர்களுக்கும் இடையில் அடிக்கடி சண்டை உண்டாயிற்று. அதை கண்ட ஆபிரகாம் அத்தகைய சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினார். லோத்துவை அழைத்து, ‘நமக்கு அன்புதான் முக்கியம். ஆகவே நாம் பிரிந்து விடலாம். நீ இடப்பக்கம் போனால், நான் வலப்பக்கம் போகிறேன், நீயே உன்கு பிடித்தமான இடத்தை தெரிந்து கொள்’ என்று விட்டு கொடுக்கிறார் ஆபிரகாம். லோத்து சுற்றிலும் பார்க்கிறார். செழிப்பான இடத்தை தெரிந்து கொண்டு, அதை நோக்கி சென்று அங்கு குடியேறுகிறார்.
.
காலங்கள் சென்றன. லோத்திருந்த ஊர் தீக்கிரையானது. லோத்து உயிர் தப்ப தனக்குள்ள எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓட வேண்டிய நிலை ஏற்ப்பட்டது. விட்டு கொடுத்த ஆபிரகாமையோ தேவன் அதிகமாய் ஆசீர்வதித்தார். அவரை பழைய ஏற்பாட்டில் மாத்திரமல்ல, புதிய ஏற்பாட்டிலும் இன்று வரை நாம் நினைவு கூருகிறோம்.
.
சுயநலம் நிறைந்த உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எதையும் தனக்குத்தானே வைத்துக் கொள்ள வெண்டும் என்பதே மனிதனின் சுபாவமாகி விட்டது. தற்போது சிரியாவில் பாருங்கள், அதன் அதிபர் தன் பதவியை விட்டு கொடுக்க மனதில்லாதபடியால், தினந்தோறும் மரித்து கொண்டிருப்பவர்கள் எத்தனை எத்தனை பேர்? அநியாயமாய் மக்கள் அழிந்து கொண்டிருக்கின்றனர். விட்டு கொடுக்கும் மனப்பான்மை நம்மில் இருக்குமானால் நம் குடும்பங்களில், சபையில், ஏன் உலகிலேயே பல பிரச்சனைகள் இல்லாமலேயே போயிருக்கும்.
.
கணவன் மனைவி பிரிந்து வாழ அவசியமிருந்திருக்காது. பல திருமணங்கள் விவாகரத்தில் முடிந்திருக்காது. மதக்கலவரமும், இனக்கலவரமும் வந்து விலை மதிப்பற்ற உயிர்களும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் சேதமடையாது. இந்தியாவில் ஏதாவது பிரச்சனை என்றால் அரசின் பஸ்களை நெருப்பு வைத்து கொளுத்துகிறார்கள். அட, நம் பணம்தானே போகிறது என்று நினைப்பதில்லை!
.
உண்மையில் பார்க்கப்போனால் உலகிலுள்ள எதுவும் நமக்கு சொந்தமானதல்ல, பூமியையும் சில ஆண்டுகள் நமது உபயோகத்திற்காக தேவன் அதில் நாம் வாழ அனுமதித்திருக்கிறார். இதை உணர்ந்தோமானால் ஒரு மனிதனுக்கும் மற்ற மனிதனுக்கும் இடையில் பிரச்சனைகள் வரக்காரணமே இருக்காது.
.
நமது கிறிஸ்தவ வாழ்வில் விட்டு கொடுக்கும் பழக்கத்தை அன்றாட வாழ்க்கையில் நாம் வெளிப்படுத்துகிறவர்களாக வாழ்ந்து காட்ட வேண்டும். இயேசுகிறிஸ்துவின் போதனையும் அதுதானே! ‘உன்னோடே சண்டையிட்டு உன் ஆடையை ஒருவன் எடுத்துக் கொள்ள விருமபினால் அவனுக்கு உன் அங்கியையும் கொடுத்துவிடு. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வர பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ’என்று தானே அவர் நமக்கு கற்று கொடுத்துள்ளார்.
.
ஒருவேளை குடும்பத்தில் சகோதரர்களுக்குள்ளே சொத்து பிரச்சனையினால் குடும்பத்தின் சமாதானம் குலையும் சூழ்நிலை உருவாகியிருக்கிறதா? ஆபிரகாமை போல நாம் விட்டு கொடுக்கும்போது, ஆண்டவர் அதை கண்டு நம்மை ஆசீர்வதிப்பார். ‘விட்டு கொடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லை, கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை’ என்ற பழமொழியும் உண்டல்லவா? ஆகவே ஆபிரகாமை போல பெருந்தன்மையாக விட்டு கொடுக்கும் பக்குவத்தை தேவன் நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக. ஆமென் அல்லேலூயா!
.
உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று
எல்லாம் உதறி விட்டேன்
உடல் பொருள் ஆவி உடமைகள் யாவும்
ஒப்புக்கொடுத்து விட்டேன்
நான் அவர் ஆலயம்
எனக்குள்ளே இயேசு
என்ன நடந்தாலும் எவ்வேளையிலும்
எப்போதும் துதித்திடுவேன்
ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை எங்கள் ஒவ்வொருவருக்கும் கொடுப்பீராக. நாங்கள் வாழும் இந்த உலகம் எங்களுக்கு சதமல்ல என்பதை உணர்ந்து, மற்றவர்களுக்கு எல்லாவற்றிலும் விட்டு கொடுத்து செல்ல உதவி செய்யும். சில நேரங்களில் எங்களுக்கு அது கடினமாக தோன்றினாலும், தேவ ஒத்தாசையுடன் அதை செய்து முடிக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.