அன்புகூருவாயாக
இப்படியிருக்க, கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்?
உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார். அதற்கு அவன்: அவனுக்கு இரக்கஞ் செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப்படியே செய் என்றார்;. – லூக்கா. 10:36,37.

சமீபத்தில் ஈட்ஹழ்ப்ங்ள் நஸ்ரீட்ன்ப்ற்க்ஷ், Charles Schultz, (the creator of the “Peanuts” comic strip) ஒரு சில கேள்விகளை எழுதியிருந்தார்.
இதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. படித்தாலே உங்களுக்குப் புரியும்.

1. உலகத்தில் மிகவும் பணக்காரரான ஐந்துப் பேரை குறிப்பிடவும்
2. ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஐந்துப் பேரைக் குறிப்பிடவும்
3. மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்ற அழகியர் ஐந்து போரை குறிப்பிடவும்
4. சிறந்த நடிகர்கள் நடிகைகளுக்கான விருதை வென்ற ஐந்துப் பேரை குறிப்பிடவும்
5. நோபல் பரிசு வென்ற பத்துப் பேரை குறிப்பிடவும்

இவர்களில் யாருடைய பேராவது உங்களுக்கு நினைவிருக்கிறதா? இவர்கள் எல்லாம் தங்கள் தங்கள் துறைகளில் சிறந்து விளங்கியவர்கள். ஆனால் அவர்களுடைய புகழ் ஓய்ந்தது. அவர்கள் செய்த சாதனைகள் மறக்கப்பட்டு போயின, அவர்களுடைய பேர் நிலைத்திருக்கவில்லை. ஆனால் இப்போது சிலக் கேள்விகள் கேட்கிறேன், பதில் தர முடியுமா என்று பாருங்கள்:
1. உங்களுடைய பள்ளியில் உங்களுக்கு உதவிய சில
ஆசிரிய ஆசிரியர்களின் பெயர்களைக் கூற முடியுமா?
2. உங்கள் கஷ்ட நேரத்தில் உதவிய மூன்று நண்பர்களின்
பெயர்களை சொல்ல முடியுமா?
3. உங்களுக்கு அருமையான வாழ்க்கையின் பாடங்களை
சொல்லிக் கொடுத்த சிலரது பேர்களைச் சொல்ல முடியுமா?
4. நீங்கள் சிறந்தவர்கள் என்று உங்களை நினைக்க வைத்த,
உங்களை பாராட்டிய சிலரதுப் பெயர்களைச் சொல்ல
முடியுமா?
5. நீங்கள் உங்கள் நேரத்தை செலவிட விரும்பும்; நண்பர்கள்
சிலரைக் கூற மடியுமா?

ஆம் இதற்கு உங்களால் உடனே பதில் சொல்ல முடியும். ஏனென்றால், இவர்கள் உங்களுக்கு வித்தியாசத்தை ஏற்படுத்தினவர்கள், இவர்கள் நிறைய பயம் படைத்தவர்கள் இல்லை, பெரிய சாதனைப் படைத்தவர்கள் இல்லை, ஆனால் இவர்கள் உங்களை நேசிக்கிறவர்கள். இவர்கள்
உங்களை விசாரிக்கிறவர்கள். இவர்களை நிச்சயமாக உங்களால் மறக்க முடியாது.

கர்த்தர் நல்ல சமாரியனின் உவமையில் இரக்கம் காட்டும்படியாக நமக்கு அறிவுறுத்துகிறார்.
இந்த உலகத்தில் தங்களை நேசிக்க யாருமில்லையே என்று அன்புக்காக ஏங்குகிற மக்கள் அநேகர் உண்டு. வெளியே பகட்டாக காட்சியளித்தாலும் உள்ளே அவர்கள் மனம் அன்புக்காக ஏங்குகிறது. ஏனென்றால் தேவன் மனிதனை படைக்கும்போது உணர்ச்சிகளோடு படைத்தார். நமது தேவனும் அன்புக்காக நம்மைத் தேடும் ஆண்டவராவார். அதனால்தான், இயேசுகிறிஸ்து
பத்து கற்பனைகளையும் இரண்டாக மாற்றி, ‘உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக
என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை’ என்றார். முதலாவது தேவனையும், பின் மற்றவர்களையும் நேசிக்க வேண்டும் என்பதே தேவன் நமக்கு கொடுத்த கட்டளையாகும்.

அப்படி நாம் நேசிக்கிறவர்களானால், நமது பெயர் மறக்கப்பட்டு போகாது. பதிலை எதிர்பாராமல் நேசிப்போம். முதலாவது தேவனை நம் முழுமையோடு நேசிப்போம், பின் நம்மை நேசிப்பதைப் போல பிறரையும் நேசிப்போம். கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக
அன்புக் கூருவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
ஜெபம்:
அரணும் கோட்டையுமான எங்கள் நல்ல தேவனே, இந்த நாளுக்காக உம்மைத் துதிக்கிறோம். நாங்கள் ஒரு வேளை எந்த சாதனையும் செய்யாதிருந்திருக்கலாம், எங்கள் பெயர் ஒருவேளை சாதனையாளர்களின் பட்டியலில வராமலிருக்கலாம், ஆனால் தகப்பனே, நாங்கள் உம்மை எங்கள் முழு இதயத்தோடும் நேசிக்கிறோம். உமது அன்பை அன்புக்காக ஏங்கும் மக்கள் மத்தியில் வெளிப்படுத்த எங்களுக்கு உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில்
கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.