கர்த்தர் யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனான ஊரியின் குமாரன் பெசலெயேலைப் பேர்சொல்லி அழைத்து, அவன் விசித்திரமான வேலைகளை யோசித்துச் செய்யவும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்யவும்,… அவனுக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளி, அவன் சகலவித வேலைகளையும் செய்யும்படி தேவ ஆவியினாலே அவனை நிரப்பினார். – (யாத்திராகமம் – 35:30-31) .
. ஒவ்வொரு நாளும் தன் அலுவலகத்தில், புதிய மலர்களை கொண்டுவந்து, அதை ஒழுங்கு செய்து அலங்கரிப்பது அனித்தாவின் வழக்கம். ஒரு முறை அவளுடன் வேலை செய்யும் ஒரு பெண், “ஏன் உன் பணத்தையும் நேரத்தையும் வீணடிக்கிறாய்?” எனக் கேட்டாள் அதற்கு அனிதா, “இந்த புதுமலர்களை பார்க்கும்போது ஒரு புத்துணர்ச்சியும், இவைகளை உண்டாக்கிய என் தேவனை துதிக்கவும் வைக்கிறது ” என்று கூறினாள்.
.
தேவன் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான தாலந்துகளை இயற்கையாகவே தந்துள்ளார். சிலர் நன்கு ஓவியங்களை வரைந்து மற்றவர்களை இரசிக்க வைக்கின்றனர். சிலர் நன்கு பாடி இசைத்தட்டுகளை வெளியிடுகின்றனர்.
.
தேவன் பெசலயேலை பெயர் சொல்லி அழைத்து, விசேஷித்த ஞானத்தை கொடுத்து, முதன்முதலாக தேவனை ஆராதிக்கும்படியாக ஆசரிப்புக் கூடாரத்தை எப்படி அலங்கரிக்க வேண்டும் என்பதன் ஞானத்தை அருளினார்.
.
தேவன் நமக்கு தருகின்ற விசேஷித்த தாலந்துகளை பரிசுத்த ஆவியானவரின் துணையோடு நாம் தேவனுக்கு உபயோகப்படுத்தினால் அது அநேகரை இயேசுகிறிஸ்துவிடம் கொண்டுவரும் என்பதில் ஐயமே இல்லை. எனக்கு எழுதுகிற தாலந்து உண்டு என்பது எனக்கு ஆரம்பத்தில் தெரியாது. ஆனால் கர்த்தருக்கென்று ஜெபித்து எழுத ஆரம்பித்தபோது தேவன் அதில் மகிமைப்பட்டார். அது அநேகருக்கு இன்றும் பிரயோஜனமாயிருக்கிறது.
.
தேவன் கொடுத்ததை திரும்பவும் நன்றியோடு தேவனுக்கென்று பயன்படுத்தும்போது தேவன் அதில் மகிமைப்படுவார். நமது தாலந்துகளை தேவனுக்கென்று உபயோகப்படுத்துவோமாக!
.
|