இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். – (மத்தேயு 28:20) .
. ஆமென்! யார் நம்மோடு கூட இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி நம் இயேசுகிறிஸ்து “முடிவுபரியந்தம் உங்களோடு கூட இருக்கிறேன்’’ என்று வாக்களித்தவர் நம்மோடு கூட என்றும் இருக்கிறார். அல்லேலூயா! எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி இது!
.
ஒரு வயதான தாயர் இங்கிலாந்தில் ஒரு சிறிய பட்டணத்தில் வசித்து வந்தார்கள். அவர்கள் இயேசுகிறிஸ்துவை அதிகம் நேசித்ததால், எப்போதும் தாம் சந்திக்கிறவர்களுக்கெல்லாம் அவரின் அன்பைக் குறித்து கூறுவார்கள். அவர் வீட்டின் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை அதற்காக கேலியும் கிண்டலும் செய்வார்கள்.
.
ஒருமுறை இங்கிலாந்தின் மகாராணி விக்டோரியா அவர்கள் அந்த மூதாட்டியின் வீட்டிற்கு வந்து சற்று நேரம் பேசிவிட்டு போனார்கள். அதுவே அந்த தெருவின் பேச்சாக இருந்தது. கிண்டல் செய்பவர்களில் சிலர் வந்து, “உங்கள் வீட்டிற்கு வந்து சென்ற மிகவும் மரியாதைக்குரிய முக்கிய விருந்தினர் யார்? ” என்று கேட்டார்கள். அதற்கு அந்த மூதாட்டி “மகாராணி விக்டோரியா” என்று பதிலளித்தார்கள். உடனே அவர்கள் ‘ஓ! நீங்கள் எப்போதும் இயேசுகிறிஸ்துவைக் குறித்து சொல்வீர்களே, இப்போது மட்டும் அவர் எப்படி மிகவும் முக்கிய விருந்தினராக இல்லாமற் போய் விட்டார்?” என்று ஏளனமாக கேட்டனர். அதற்கு அந்த மூதாட்டி, “ஆம் ராணியார்தான் என் விருந்தினர். ஆனால் இயேசுகிறிஸ்து என் விருந்தினரல்ல, அவர் என்னோடு எப்போதும் இருக்கிறார் ” என்று மிகுந்த மகிழ்ச்சியோடு கூறினார்கள். கேட்டவர்கள் வாயடைத்துப் போனார்கள்.
.
பிரியமானவர்களே! நாம் கிறிஸ்துவை ஒரு விருந்தினராக வைத்திருக்கிறோமா? இல்லாவிட்டால் நம்மோடு கூட எப்போதும் இருப்பவராக நம் இல்லத்தின், உள்ளத்தின் தலைவராக வைத்திருக்கிறோமா? இல்லாவிட்டால் இன்றே நம் உள்ளத்திற்குள் அவரை அழைப்போம்.
.
சர்வ வல்லவர் என் சொந்தமானார்
சாவை வென்றவர் என் எஜமானன்
. |