|
||
|
||
|
||
|
||
|
||
|
||
![]()
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்த புதிய வருடத்தில்
எங்களை மற்றவர்களுக்காக ஜெபிக்கிறவர்களாக மாற்றும். இந்த
வேளையிலும் நாங்கள் ஏறெடுக்கிற விண்ணப்பங்களை கேட்டு நீரே
பதில் தருவீராக.
.
.
சகோதரி மீனா அவர்கள் கடைசி வருடம் பி.டெக் படித்துக்
கொண்டிருக்கிறபடியால் அவர்கள் எழுதியிருக்கிற பரிட்சையில்
எல்லா சப்ஜெக்ட்டுகளிலும் நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ண தேவன்
கிருபை செய்வீராக. நல்ல ஞானத்தினாலும், அறிவினாலும், ஞாபக
சக்தியாலும் நிரப்புவீராக.
.
.
சகோதரி ஜானு அம்மு அவர்களின் சகோதரி கர்ப்பம் தரிக்க தேவன்
கிருபை செய்வீராக. எல்லா தடைகளையும் மாற்றிப் போடும்.
அழகான குழந்தையை பெற்றெடுத்து உமக்கு சாட்சியாக வாழ கிருபை
செய்யும்.
.
.
சகோதரன் நந்தக்குமார் அவர்களின் பெற்றோரை பாதுகாத்து,
அவர்களின் தேவைகளை சந்தக்கும்படியாக ஜெபிக்கிறோம்.
சகோதரன் நந்தக்குமாருக்கு இருக்கிற எல்லா பிரச்சனைகளையும்
நீக்கி, இன்னும் அதிகமாக உமக்கென்று வாழ கிருபை செய்யும்.
.
.
உலகமெங்கும் இந்த வருடம் மிகுந்த குளிரினால் பாடுபடுகிற
ஒவ்வொருவருக்காகவும் உம்மிடம் மன்றாடுகிறோம் தகப்பனே. இந்த
குளிரை தாங்க முடியாமல் தவிக்கிற வயதானவர்களுக்காக,
சிறுபிள்ளைகளுக்காக ஜெபிக்கிறோம் இந்த குளிர் சூழ்நிலைகள்
சீக்கிரமாய் மாறிப் போக ஜெபிக்கிறோம். பகலில்
மேகஸ்தம்பமாகவும், இரவில் அக்கினி ஸ்தம்பமாகவும் பாதுகாத்த
தேவன் இந்த குளிர் காலத்தில் பாதுகாப்பீராக. குளிரை
தாங்கும்படியான கிருபைகளை கொடுப்பீராக.
.
.
இந்திய தேசத்து தேர்தலுக்காக உம்மிடம் மன்றாடுகிறோம் தகப்பனே.
இராஜாக்களை தள்ளி, இராஜாக்களை ஏற்படுத்துகிற தேவன் நீர் ஐயா.
நீரே பூமியெங்கும் அரசாளுகிறீர். உம்முடைய சித்தமில்லாமல்
யாரும் இந்த பூலகத்தில் ஆட்சி செய்வதில்லையே. எங்கள் இந்திய
தேசத்திலும் ஏப்ரல் மாதம் நடக்க இருக்கிற தேர்தலை ஒப்புக்
கொடுக்கிறோம். நீர் விரும்புகிற, உம் சித்தம் செய்கிற நபரையே,
கட்சியையே ஆட்சி அமைக்க கிருபை செய்யும். சுவிசேஷத்திற்கு
தடை கூறாத ஆட்சி அமைய கிருபை செய்யும்.
.
.
எங்கள் ஜெபங்களை கேட்டு, ஜெபிக்க கேட்டுக் கொண்ட
ஒவ்வொருவரின் வாழ்விலும் பெரிய காரியங்களை செய்யப்
போவதற்காக உமக்கு நன்றி. எங்கள் தேசத்தின் தேர்தலில்
உம்முடைய சித்தம் விளங்கப் போவதற்காக நன்றி.
இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம்
நல்ல தகப்பனே ஆமென்.
|