விசுவாச சந்ததி

விசுவாச சந்ததி
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
‘நாளை இந்தக் கற்கள் ஏதென்று உங்கள் பிள்ளைகள் உங்களைக் கேட்கும்போது, நீங்கள்: கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோனதினால் அவைகள் வைக்கப்பட்டிருக்கிறது; யோர்தானைக் கடந்துபோகிறபோது, யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோயிற்று; ஆகையால் இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருக்கு என்றைக்கும் நினைப்பூட்டும் அடையாளம் என்று சொல்லுங்கள்’ என்றான். – (யோசுவா 4:6-7).

.

வயலின் இசைக்கருவியை உருவாக்கும் கலைஞர் அதை உருவாக்கும் விதம் குறித்துக் கூறும்போது, ‘பல்லாண்டு காலம் வாழ்ந்து, முதிர்ந்த மரத்தைக் கொண்டே வயலினை செய்ய வேண்டும். இப்படி செய்யப்பட்ட கருவி எண்பது ஆண்டுகள் வாசிக்கப்பட்ட பின்னரே, மிகச் சிறந்த இசையை அதினின்று ஒலிக்கும். ஆகவே ஒரு சில கலைஞர்களைத் தவிர மற்றவர்கள் அவர்கள் உயிரோடிருக்கும்போது தங்கள் வயலினின் சிறந்த இசையை கேட்க இயலாது. அவரது அடுத்த தலைமுறையினரே அந்த இசைக்கருவியின் மிகச் சிறந்த இசையை கேட்ட முடியும்’ என்றுக் கூறினார்.
.
‘நமது வாழ்வில் நடக்கும் அநேக நிகழ்வுகள் அடுத்த தலைமுறையினரை உருவாக்கும் கருவிகள்’ என்றார் ஒருவர். ஆம், அது எவ்வளவு உண்மை! இதைப் போலத்தான் நாம் நல்ல பெற்றோராய், சிறந்த முன்மாதிhகளாய் விளங்கும்போது, சிறந்த ஒரு தலைமுறையை உருவாக்க முடியுமல்லவா? இந்த தலைமுறையின் பயபக்தியான வாழ்க்கை நிச்சயம் வரும் சந்ததியை பயபக்தியுள்ள வாழ்வு வாழ ஒரு கருவியாக அமையும்.
.
வேதத்தில் பார்ப்போமானால், இஸ்ரவேல் ஜனங்களை தேவன் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, கானான் தேசத்திற்கு அழைத்து வரும்போது, அவர்கள் வாழ்வில் நடந்த அற்புதங்களையும், அடையாளங்களையும் அடுத்த தலைமுறையினரான அவர்களது பிள்ளைகளு;ககு மறவாமல் போதிக்க வேண்டுமென்று கட்டளைக் கொடுத்தார்.
.
குறிப்பாக யோர்தானின் தண்ணீர் பிரிந்து நின்று இஸ்ரவேல் ஜனங்கள் அக்கரை சென்றதை நினைவுகூரும் அடையாளமாக யேர்ர்தானிலிருந்து பன்னிரண்டு கோத்திரத்திலும் ஒவ்வொருவராக ஒரு கல் வீதம் பன்னிரண்டு கற்களை எடுத்து, தாங்கள் தங்கின இடத்திலே வைக்கும்படி கட்டளைக்கொடுத்தார். அவர்களது பிள்ளைகள் இந்த கற்களைக் குறித்து விசாரிக்கும்போது, அதிசயவிதமாய் தேவன் யோர்தானைக் கடக்க பண்ணின விதத்தை அவர்களுக்கு அறிவிக்க சொன்னார்.
.
ஆம், நம் வாழ்விலும் கர்த்தர் நம்மை நடத்தின அற்புதமான, அதிசயமான வழிநடத்துதலை நம் சந்ததிக்கு அறிவிக்க வேண்டியது நமது கடமையாகும். இக்கட்டு நேரத்தில் தேவன் நம்மை விடுவித்த விதம், ஆபத்தில் பாதுகாத்த கிருபை, வியாதியிலிருந்து நம் ஜீவனை மீட்ட விதம், கடனிலிருந்து நம்மை விடுவித்த விதம், படிக்க இடம் கிடைத்தது, வேலை கிடைத்தது, வீடு கட்டினது என தேவன் செய்த அற்புதங்கள் ஒன்றா? இரண்டா?.
.
இவையெல்லாவற்றையும் நம் பிள்ளைகளுக்கு அவ்வப்போது சொல்வோமானால், அவர்களும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மேல் நம்பிக்கையும், விசுவாசமும் பெற்று வளருவார்கள். அவர்கள் பின் நாட்களில் அந்த பாதைகளின் வழியே செல்லும்போது, கர்த்தர் நடத்தின வழிகளை நினைவுகூர்ந்து, கர்த்தருக்கு மகிமை செலுத்துவார்கள்.
.
இப்படி நாம் நம் பிள்ளைகளுக்கு கர்த்தர் செய்த நன்மைகளை சொல்லிக் கொடுத்து வளர்ப்போமென்றால், அவர்கள் ஒரு விசுவாச சந்ததியாக உருவாவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. அப்படிப்பட்ட விசுவாச சந்ததியை தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்து ஆசீர்வதிப்பாராக! ஆமென் அல்லேலூயா!
.
கர்த்தர் நம்மை நடத்தின வழிகள்

எந்நாளும் நினைத்திடுவோம்
நன்றியாலே நிறைந்தவர் நாமம்

எந்நாளும் துதித்திடுவோம்
.
அன்றொரு நாளில் அழைத்தவர் அவரே
இன்று வரையிலும் நடத்தி வந்தாரே
என்றும் அவர் நாமம் உயர்த்தியே
விசுவாச சந்ததி உருவாக்குவோமே 
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்கள் வருங்கால சந்ததிக்கு உம்மைக் குறித்து அறிவித்து ஒரு விசுவாச சந்ததியை உருவாக்க எங்களுக்கு ஞானத்தை தாரும். நீர் எங்களுக்கு செய்த நன்மைகளை நாங்கள் மறவாமல் எங்களுடைய பிள்ளைகளுக்கு சொல்லி, அவர்களை விசுவாசத்திலும், கர்த்தரை குறித்த பயத்திலும் வளர்க்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு
pray1another
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, உம்முடைய பரிசுத்த குமாரனாகிய இயேசுகிறிஸ்து என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை தருவேன் என்று சொன்னாரே, இயேசுவின் நாமத்தில் எங்கள் விண்ணப்பங்களை ஏறெடுக்கிறோம் ஐயா. தயவாய் கேட்டு பதில் தாருமே.
.
சகோதரன் பரணிஜூதா அவர்களின் வாழ்வில் கர்த்தரின் அழைப்பு இருந்தும் என்ன செய்வது என்று குழப்பத்தில் இருக்கும் சகோதரனுக்கு வேத வார்த்தைகள் மூலம் பேசி, அவருடைய நிலையை அவருக்கு எடுத்துக்காட்டி எல்லா குழப்பங்களையும் மாற்றும்படியாக ஜெபிக்கிறோம். உமக்கென்று சாட்சியாக வாழ கிருபை செய்யும். என்ன செய்ய வேண்டுமென்பதை வெளிக்காட்டுவீராக
.
சகோதரன் பால் ரத்தினம் அவர்களின் தகப்பன் குடிப்பழக்கத்திலிருந்து விடுதலையாகும்படி ஜெபிக்கிறோம். அந்த பழக்கத்தைக் கொண்டு வரும் சத்துருவின் அந்தகார சக்திகளை இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அகன்றுப் போக கட்டளை கொடுக்கிறோம். அவருடைய கர்ப்பமாயுள்ள சகோதரி நல்ல ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க கிருபை செய்யும். அவருiடைய வக்கீல் படிக்கும் அவருடைய தம்பிக்கு ஏற்ற ஞானத்தைக் கொடுத்து சரியானபடி படித்து முடிக்க கிருபை செய்யும். சகோதரனுக்கும் படிப்பிற்கேற்ற நல்ல வேலையை கொடுத்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம்.
.
சகோதரன் டேவிட் ஜெபராஜ் அவர்களுக்கு அவர் வேலை செய்த கம்பெனியிலிருந்து ரிலீஸ் கிடைக்கும்படியாக ஜெபிக்கிறோம். யார் யார் கண்களில் தயவு கிடைக்க வேண்டுமோ அவர்கள் கண்களில் தயவு கிடைத்து, சீக்கிரமாய் ரிலீஸ் கிடைக்க கிருபை செய்யும்.
.
அனுதின மன்னாவை கன்னடத்தில் மொழி பெயர்ப்பு செய்யும் சகோதரி சுசீலா அவர்களின் தாயார் மேரி அவர்களின் முகத்தில் ஏற்பட்டிருக்கும் அலர்ஜிகளை மாற்றும்படியாக ஜெபிக்கிறோம். அவர்கள் பூரண சுகத்தை பெற்றுக் கொள்ள கிருபை செய்யும். திரும்பவும் அந்த அலர்ஜி அவர்கள் முகத்தில் வராதபடி காத்துக் கொள்ளும். அவர்களின் எல்லாத் தேவைகளையும் சந்தித்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம்.
இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.