கணவன் மனைவிக்கு செய்ய வேண்டியது
1) அன்பு கூற வேண்டும் – எபேசி 5:25
2) கனப்படுத்த வேண்டும் – 1 பேது 3:7
3) மனைவியை பிரியப்படுத்த வேண்டும் – 1 கொரி 7:33
4) நேசிக்க வேண்டும் – ஆதி 24:67, பிரச 9:9
5) மனைவிக்காக ஜெபிக்க வேண்டும் ( ஈசாக்கு மலடியாக இருந்த ரெபேக்காளுக்காக ஜெபித்து குறையை நிறைவு ஆக்கினான்) ஆதி 25:21
6) மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய வேண்டும் – 1 கொரி 7:3
7) திடப்படுத்த (தைரியப்படுத்த) வேண்டும். மனைவியானவள் பெலவின பாண்டம் என்று 1 பேது 3:7 ல் வாசிக்கிறோம் (எல்க்கானா அன்னாளை பார்த்து “10 குமாரரை பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா” என்கிறான்) – 1 சாமு 1:8
8) விசாரிக்க வேண்டும். (சாப்பிட்டாயா, காபி குடித்தாயா என்று phone ல் கேட்க வேண்டும்) (எல்க்கானா அன்னாளை பார்த்து “ஏன் சாப்பிடவில்லை” என்கிறான்) – 1 சாமு 1:8)
9) மனைவியை ஏற்ற துணையாக நினைக்க வேண்டும் – ஆதி 2:18