மனதுருகும் தெய்வம்* (கருணையுள்ள கடவுள்)
*ஏசாயா 30:18* உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கிவான்கள். *
ஏசாயா 54:10 (7-10); ஏசாயா 55:7 (6-13)* *மத்தேயு 20:34 (29-34)* குருடர்மீது; *மாற்கு 1:41 (40-42)* குஷ்டரோகியின்மீது; *லூக்கா 7:13 (11-15)* விதவையின்மீது *
1. மனதுருகும் மேய்ப்பனாய் இருக்கிறார்* —————– *மத்தேயு 9:36 (35-38)* [36]அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி… *மாற்கு 6:34(34-44)* *
2. மனதுருகும் தகப்பனாய் இருக்கிறார்* —————– *லூக்கா 15:20(11-24)* [20]எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான். *
3. மனதுருகும் நண்பராய் இருக்கிறார்*(சமாரியன்) —————– லூக்கா 10:33 [33]பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி… சத்திரத்துக்கு கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்