இலக்கை நோக்கி ஓடுவோம்
பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம். – (1 கொரிந்தியர் 9:24-25).
ஒரு காட்டில் ஒரு நரி, ஒரு முயலை பார்த்தது. அதை பார்த்தவுடன் அதற்கு அதை எப்படியாவது சாப்பிட வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. முயலும் நரியை பார்த்தது. ஆனால் முயல் எப்படியாவது இந்த நரியிடமிருந்து தப்பி, வாழ வேண்டும் என்று நினைத்தது. நரி முயலை துரத்த ஆரம்பித்தது. முயலும் ஓட ஆரம்பித்தது. இரண்டும் வேகமாக ஓடின.
இதில் முயல் தன் உயிர் தப்பும்படி ஓடினது. ஆனால் நரியோ தன் ஆசை நிறைவேற ஓடியது. முயலின் வேகத்திற்கு நரியால் ஈடு கட்ட முடியவில்லை. இத்தனை தூரம் ஓடி வந்தது வீண், இனி முயலை பிடிக்க முடியாது என்று தன் ஓட்டத்தை நிறுத்தினது. முயல் தன் ஜீவன் தப்ப ஓடினபடியினால் தான் எத்தனை வேகமாய் ஓடி வந்திருக்கிறோம் என்பதை கூட மறந்து, தன் ஜீவனை காத்து கொண்டது.
பிரியமானவர்களே, கிறிஸ்தவர்களிலும் இப்படிப்பட்ட இரண்டு வகையான மக்கள் காணப்படுகின்றனர். ஒரு கூட்டத்தார் தேவனைக் குறித்தும், அவருடைய வருகையை குறித்தும் கவலையே இல்லாமல், ஏனோதானோவென்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மற்றொரு கூட்டத்தாருக்கு கிறிஸ்துதான் எல்லாம். இவர்களுக்குள் என்ன வித்தியாசம்? முயலுக்கும், நரிக்கும் இடையில் காணப்படும் வித்தியாசமே! ஒரு கூட்டத்தார் தங்கள் வாழ்விற்காக ஓடுகிறார்கள், மற்றவர்கள் தங்களுக்கு ஏதாவது கிடைக்கும் என்று நினைத்து ஓடுகிறார்கள்.
கிறிஸ்துவையே தங்கள் இலக்காக வைத்து ஓடும் கூட்டத்தார், தங்கள் முன் வரும் எந்த சோதனைகளையும், எந்த பாடுகளையும், எந்த இச்சைகளையும் பொருட்படுத்தாமல், தேவன் தங்களுக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடு ஓடி, தேவன் அவர்களுக்கென்று வைத்திருக்கிற அழிவில்லாத கிரீடத்தை பெற்று கொள்வார்கள்.
மற்றவர்களோ சோதனை என்று ஒன்று வந்தால், அதில் விழுந்து போகிறவர்களாக, பாடுகள் துன்பங்கள் வந்தால், பின்வாங்கி போகிறவர்களாக, உலகமே தங்களுக்கு என்றும் நியமித்திருக்கிறது போல ஓடுகிறவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு தங்கள் தேவனோ, கர்த்தருடைய வார்த்தைகளோ வசனமோ ஒரு பொருட்டே இல்லை. ஏதோ வாழ்கிறோம், எல்லாரும் சாகிறது போல நாமும் சாவோம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இருக்க போவதில்லை. தங்களுக்கே பிரயோஜனமில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தேவன் நம்மை அப்படியாக வாழ்வதற்காக அழைக்கவில்லை. அவருக்குள் நாம் வெற்றியாக நம் வாழ்வை ஓடி முடிப்பதோடு, நம்மோடு கூட பலரையும் வெற்றிகரமாக ஓடி முடிக்க வைக்கத்தான் அவர் நம்மை அழைத்தார். அப்படிப்பட்டவர்கள் தான் கடைசி நாளில் சொல்ல முடியும், ‘நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்’ (2 தீமோத்தேயு 4:7) என்று. இப்படிப்பட்ட வாழ்வையே நாம் வாழ வேண்டும். நம்மால் கர்த்தருக்கு ஏதாவது ஒரு வகையில் பிரயோஜனம் இருக்க வேண்டும். தன்னிடத்தில் உள்ள தாலந்தை புதைத்து வைத்த வேலைக்காரனை போல நாம் இராதபடி, தேவன், பொல்லாத ஊழியக்காரனே என்று நம்மை குறித்து சொல்லாதபடி, நம்மால் இயன்றதை, கர்த்தர் நமக்கு கொடுத்த தாலந்தை அவருக்காக உபயோகிப்போம். நம் ஓட்டத்தையும் வெற்றியாக முடிப்பதோடு, நம்மோடு வெற்றியாக வாழ்ந்த அநேகரை பரலோகத்திற்கு கொண்டு போகும்படியாக ஓடுவோம். கர்த்தர் அதில் பிரியப்படுவார். ஆமென் அல்லேலூயா!
பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்
நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன்
ஓடுகிறேன் நான் ஓடுகிறேன்
என் இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
எத்தனைதான் இடறல்கள் வந்தாலும்
விசுவாசத்தில் நிலைத்திருப்பேன்
எனக்காக அப்பா நியமித்த
இன்ப பாதையிலே நான் ஓடுகிறேன்
ஜெபம்:
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, தேவன் எங்களுக்கு நியமித்திருக்கிற ஓட்டத்திலே நாங்கள் பொறுமையோடு ஓடி, அழிவில்லாத கிரீடத்தையும், நீதியின் கிரிடத்தையும் பெற்று கொள்ள கிருபை செய்வீராக. எங்கள் ஓட்டம் எங்களுக்கு மாத்திரமல்ல, மற்றவர்களுக்கும் பிரயோஜனமாயிருக்கத்தக்கதான ஓட்டத்தை நாங்கள் ஓட கிருபை செய்யும். எந்த பிரச்சனைகளும் போராட்டங்கள் வந்தாலும் கிறிஸ்துவுக்குள் நாங்கள் ஓடுகிற ஓட்டத்தை எதுவும் தடை செய்யாதபடி ஓட்டத்தை கிறிஸ்துவுக்குள் முடித்தோம் என்று சொல்லும்படியாக ஓடி முடிக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.