உன்னை நேசிக்கும் ஒருவர்
நம்மை மிகவும் அதிகமாக நேசிப்பவர் தேவனாகிய கர்த்தர்
அவர் நம்மீது கொண்டுள்ள அன்புக்கு அளவே இல்லை
அவர் உலகிலுக்க எல்லா மக்களையும் நேசிக்கிறார்
அவர் தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை மனிதர்களின் பாவத்திற்குப் பரிகாரியாக உலகிற்கு அனுப்பியதே மிகப் பெரிய செயல்
ஆகவே இயேசு கிறிஸ்துதான் நமக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு
உலகிலுள்ள எல்ல மக்களுக்கும் இயேசுவே இரட்சகர்
இயேசு கிறிஸ்து நமது பாவத்திற்கான தண்டனையை ஏற்றுக்கொண்டதால் நித்திய வாழ்வைப் பெற மிக எளிய வழி இயேசுவை நமது இரட்சகராக ஏற்றுக்கொள்வதுதான்
நித்திய வாழ்வை விரும்பும் எல்லோருக்கும் இயேசுவே வழி
இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களுக்கு நித்திய அழிவு இல்லை
ஆனால் அவர்களுக்கு நித்திய மகிழ்ச்சியான வாழ்வு ஆயத்தமாயிருக்கிறது
இந்த நித்திய வாழ்வு இயேசுவை விசுவாசிக்கும் எல்லோருக்கும் உண்டு
இயேசுவோடு நித்தியமாக வாழ்வது மாபெரும் பாக்கியம்.
வேத புத்தகத்தின் மையக் கருத்தை யோவான் 3:16ல் காணலாம்.
பொய் சொல்லுதல், பொறாமை படுதல், ஏமாற்றுதல், சண்டைகள், பகைகள், சூனியம் வைத்தல், திருட்டு, கொலை, விரோதித்தல், மற்றவனுடைய பொருளுக்கு ஆசைபடுதல், ஆபாசங்கள், தூஷணவார்த்தைகள், கேலி, போன்ற அனைத்துமே பாவங்கள் என்று வேதம் நமக்கு கற்றுத்தருகிறது.
இவைகளில் ஏதாவது ஒன்று நம்மிடம் இருந்தாலும், நாம் நரகத்திற்குத் தான் செல்வோம் என்றும் வேதம் நம்மை எச்சரிக்கிறது.
இதை வாசிக்கும் அன்பரே, சற்று சிந்தித்து பாருங்கள். உங்களுடைய நித்திய வாழ்வை நரகத்தில் கழிக்க ஆயத்தமா? இல்லை மோட்சத்தில் கழிக்க வேண்டுமா?
உங்களை நேசித்து தான் இயேசு தன்னையே பாவப் பரிகாரியாக ஒப்புக்கொடுத்து, சிலுவையில் உங்களுடைய பாவங்களுக்காக அவர் மரித்தார்.
நீங்கள் செய்த பாவங்களிலிருந்து விடுபட ஒரே வழிதான் உண்டு. இன்றே இரட்சகர் இயேசுவிடம் உங்கள் பாவங்களை அறிக்கை செய்யுங்கள், இயேசுவை விசுவாசியுங்கள்.
இயேசு கிறிஸ்து உங்களை இரட்சிப்பார்.
“தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ, இரக்கம் பெறுவான் – நீதி 28:13”