உம் கண்ணீரைத் துடைக்கும் கர்த்தர்
தேவன் மனிதனைத் தம் சாயலிலும் ரூபத்திலும் சிருஷ்டித்தார். தேவன் அவனைச் சிருஷ்டித்த நாளில் அவன் தேவனோடு ஐக்கியம் உள்ளவனாக ,தனக்குள்ளே சந்தோஷம், சமாதானம் உள்ளவனாக ,மற்ற ஜீவராசிகளோடு பகையின்றி ஒற்றுமையுள்ளவனாக வாழ்ந்து வந்தான். எனினும் அந்நிலையில் காக்கபட்டிருக்க வேண்டிய மனுஷன் தேவனுக்குக் கீழ்படியாதவனாய் பாவம் செய்து ,தேவனோடுள்ள ஐக்கியத்திலிருந்து துண்டிக்கப்பட்டு தனித்தவானான்.பாவ இருள் அவனைச் சூழ்ந்து கொண்டது. அவன் தன் சந்தோஷ சமாதானத்தை இழந்தான் .அது முதல் மனிதன் தன் வாழ்வில் பலவித போராட்டங்களையும் பிரச்சனைகளையும் சந்தித்துக்கொண்டிருக்கிறான். வியாதி, மரண பயம், பசி, கடன் தொல்லை, நிந்தனைகள், குடும்பத்தில் பிரிவினை, வேலையில்லாத் திண்டாட்டம், பில்லிசூனியக் கட்டுகள் போன்றவற்றின் மூலம் அவன் நாள்தோறும் நோய்கொண்டு ஒடுங்குகிறான். இந்நிலையில் அவன் தன் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வழியின்றி, இன்னை நேசிக்க , விசாரிக்க யாரும் இல்லையா என்று எண்ணிக் கலங்குகிறான். இவற்றினால் நிராசையடைந்து தற்கொலாஈ செய்துகொள்வாரும் உண்டு.
துயரமான இந்நிலையில் யாரிடம் செல்வேன் என்று கலங்கும் நண்பனே! உம் நிலைமையை முற்றிலும் அறிந்த ஆண்டவராகிய இயேசு உமக்காக ஜீவிக்கிறார். அவர் உம்மை விடுவிக்க வல்லவர் .அவர் உம்மேல் மனதுருக்கம் உள்ளவர் . “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைபாறுதல் தருவேன்”(மத்.11:28) என்று அவர் உன்னை அழைக்கிறார்.அந்த ஆண்டவராகிய இயேசுவண்டை நீர் வருவீராக.
’நான் அந்த இயேசுவிடம் வரும்படி அவர் யார்? நான் அவரை அறியேனே’ என்பீரேயாகீல், இதோ, நாங்கள் இக்கைப்பிரதியின் மூலம் அவரை உமக்கு அறிமுகபடுத்துகிறோம். அவரே மனுகுலத்தை சிருஷ்டி கர்த்தர் பாவஞ்செய்ததினிமித்தம் மனுஷன் தம்மை விட்டு பிரிந்து கொடிய வேதனைகளை அனுபவித்தவராய்,அவர் மனுஷன்பால் கொண்ட நேசத்தால் ,அவனுக்காக மானிடனாக , பாவசம்பந்தமற்றவராய், கன்னிகையின் வயிற்றில் பிறந்தார். அவர் இப்பாவ உலகில் பரிசுத்தவராய் வாழ்ந்தார்.அவரில் பாவம் இல்லை. அவர் பாவம் அறியாதவராயிருந்தார் .வியாதியஸ்தரைச், குஷ்டரோகிகளைச் சொஸ்தமாக்குகிறவராய், பிசாசின் பிடியிலிருந்து ஜனங்களை விடுவிக்கிறவராய், அவர் ஜனங்களுக்கு நன்மை செய்கிறவராய்ச் சுற்றிதிரிந்தார். எனினும் மனுக்குலத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாக அவர் வந்தமையால் மனிதனுடைய மீட்புக்காக அவர் கல்வாரிச் சிலுவையில் மரிக்க வேண்டியது அவசியமாயிற்று. அவர் பாவமில்லாத பரிசுத்தராயிருந்தபடியால் மரித்து அடக்கம்பண்ணப்பட்ட மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.இவ்விதம் அவர் மனிதனுடைய பாவங்களையும் சாபங்களையும் வியாதிகளையும் தம்மேல் ஏற்றுக்கொண்டு மனிதக்காக மரித்து உயிர்தெழுந்து இன்றும் என்றும் மாறாதவராய் இன்றும் உமக்காக ஜீவித்துக்கொண்டிருக்கிறார். அவரே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவ மன்னிப்பைப் பெறுவான் (அப்10:43). அவரை விசுவாசித்து உம் பாவங்களை மெய்மனஸ்தாபத்தோடு அவரிடம் அறிக்கை செய்தால்,கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, உம்மைச் சுத்திகரிக்கும் (1யோவான் 1:7).
இப்பொழுதே, முழங்கால் போட்டு இயேசுவிடம் எல்லாவற்றையும் சொல்லுங்கள். எல்லா பாவங்களையும், எல்லா கவலைகளையும், எல்லா துன்பங்களையும் அவரிடம் சொல்லுங்கள். அவர் இவைகளிலிருந்து உமக்கு விடுதலையும் சுகமும் சமாதானமும் பெலனும் தருவார்.
இப்போது அவர் உம்மோடு பின்வருமாறு பேசுகிறார். “உன் வின்னப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக்கண்டேன்;… நான் உன்னைக் குண்மாக்குவேன்” (11இராஜ.20:5); “துக்கப்படுகிறவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்” (ஏசாயா 57:18); “இனி நீ அழுது கொண்டிராய்”; “உன் துக்கநாட்கள் முடிந்துபோம்”(ஏசாயா 57 :18 )
இதை வாசிக்கும் நண்பரே! உம்மை விசாரிக்கும்படி, உம் துக்கங்களைச் சுமக்கும்படி, உம் கவலைகளைப் போக்கும்படி, உம் கண்ணீரைத் துடைக்குப்படி, உமக்காக தேவன் இயேசு கிறிஸ்து இருக்கிறார்.