எச்சரிப்பு

எச்சரிப்பு

லக்ஷ்மி என்று சொல்லி ஒரு கல்லூரி மாணவி இருந்தாள். அவள் கல்லூரிக்கு செல்லும்படியாக ரயிலில் பயணம் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தால்.
அப்படியே ஒரு நாள் ரயில் நிலையத்திற்கு சென்றாள். அங்கு இருந்த ஒரு தண்டவாளம் பிளவுப்பட்டு உடைந்து போயிருந்தது. ”தண்டவாளம் உடைந்து போயிருக்கிறதே ரயில் எப்படி வரும்” என்று தனது மனதில் யோசித்தவளாய் நின்றுகொண்டிருந்தாள். ஒரு சில விநாடிகள் ரயில் வரும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. லக்ஷ்மி சற்று எட்டிப்பார்த்தபொழுது தண்டவாளம் உடைந்து போனதை அறியாமல் ஒரு ரயில் வந்துகொண்டிருக்கிறதைக் கண்டு அதிர்ச்சியுற்றாள். லக்ஷ்மிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. ரயில் ஊழியர்களிடம் ரயில் நிறுத்த சொல்லலாம் என்றால் கண்ணுக்கெட்டின தூரம் வரைக்கும் ஒருவருமே காணவில்லை. பொதுமக்களும் ரயிலிற்காக காத்துக்கொண்டிருக்கிறார்களே தவிர ஒருவருக்கும் தண்டவாளம் உடைந்து இருப்பது தெரியவில்லை. லக்ஷ்மிக்கு, சிவப்பு விளக்கை எரியச்செய்தால் அதை கவனிக்கும் ரயில் ஓட்டுனர் ரயிலை நிறித்திவிடுவார் என்று ஒரு யோசனை தோன்றியது. ஆனால் சுற்றிலும் பார்த்தபோது சிவப்பு விளக்கை எப்படி எரியசெய்வது, அது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை.
லக்ஷ்மிக்கு மிகவும் பதட்டமாகவே இருந்தது அவள் கண்களுக்குள் ரயிலில் வந்துக்கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் பயணிகளின் உயிர்மட்டுமே தெரிகிறது. என்ன செய்வதென்று பரிதவித்து கொண்டிருக்கையில் குப்பை தொட்டியும் அதில் உள்ள பேப்பர்களும் லக்ஷ்மியின் கண்களில்பட்டது.
உடனே லக்ஷ்மி, அந்த பேப்பர்களை பொறுக்கி சுருட்டி, அதற்கு தீ வைத்து, கைகளில் ஏந்தி, ரயில் நோக்கி தன் கைகளில் உள்ள தீப்பந்தத்தை அசைந்தவளாய் ஓடினாள். தீப்பந்தத்தை பார்த்த ரயில் ஓட்டுனர் ஏதோ ஆபத்து என்று உணர்ந்து ரயிலை உடனடியாக நிறுத்தினார். லக்ஷ்மி மரணத்திலிருந்து ஆயிரக்கணக்கான பயணிகளை காப்பாற்றினால், ரயில் நிலையத்திலுள்ள அனைத்து மக்களும் அவளை பாராட்டினார்கள்.
பிரியமானவரே, லக்ஷ்மி காட்டின எச்சரிப்பை அனைவருமே பாராட்டினார்கள் (ஆனால்), நம்முடைய தேவன் நமக்கு மிக மிக முக்கியமான, அவசியமான ஒரு எச்சரிப்பை கொடுத்துள்ளார். அதைமட்டும் நாம் ஏன் புரிந்து கொள்வதில்லை? பரிசுத்த வேதம் சொல்லுகிறது நரகம் என்று ஒன்று உண்டு. அது எந்நேரமும் அக்கினியும் கந்தகமும் எரிகிற எரிநரகம், அங்கு எப்பொழுதும் எந்நேரமும் பாவிகள் அனைவரும் அக்கினியினால் வாதிக்கப்படுவார்கள்.
கொலை, கொள்ளை, களவு, பொய்,…… போன்றவைகளை செய்கிற ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய மரணத்திற்கு பிறகு இந்த நரகத்திற்குத்தான் செல்வான். நித்திய நித்திய காலமாக அழியாத தீயினால் வாதிக்கப்படுவான்.
இது நமக்கு தேவன் கொடுக்கும் மிக மிக அவசியமான முக்கியமான எச்சரிப்பாகும்.
பிரியமானவர்களே, இந்த பாவங்களிலிருந்து விடுவித்து உன்னை மோட்சத்திற்கு அனுப்பும்படியாக, ஒரே இரட்சகனாகிய இயேசு கிறிஸ்து உனக்காக, பாவநிவாரணபலியாக தன்னை சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
இப்பொழுதும் நீர் இந்த இரட்சகரான இயேசு கிறிஸ்துவிடம் உன்னுடைய பாவங்களை அறிக்கைசெய்தால், இயேசு தாமே உன்னுடைய சகல பாவங்களையும் உனக்கு மன்னித்து தன்னுடைய வல்லமையுள்ள இரத்தத்தினால் உன்னை கழுவி சுத்திகரித்து அந்த நித்திய மோட்சத்திற்கு உன்னை தகுதிப்படுத்துவார்.ஒரு வேளை இன்றைக்கு நீ மரித்துப்போனால் உன்னுடைய நிலமை என்ன? நீ எங்கு போவாய்? மோட்சத்திற்கா? அல்லது நரகத்திற்கா?
பிரியமானவரே, இன்றைக்கே, இப்பொழுதே இயேசுவை உன் சொந்த இரட்சகராக ஏற்றுகொள். கொடிய எரி நரகத்திலிருந்து உன்னை காப்பாற்றிகொள், இன்னும் தாமதிப்பானேன். இப்பொழுதே உன்னுடைய பாவங்களை இயேசுவிடம் அறிக்கை செய்து பாவமன்னிப்பை பெற்றுக்கொள்.