இது விதைக்கின்ற காலமல்லவோ?
நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார். – (1 கொரிந்தியர் 3:6).
ஒரு ஒரு விவசாயி ஒரு மாந்தோப்பை உண்டாக்க வேண்டுமென்றால், முதலாவது அவன் நிலத்தை சீர் செய்த பிறகு, மாங்கன்றுகளை நட வேண்டும். பின் தண்ணீர் ஊற்ற வேண்டும். அப்போது தான் மாங்கன்று மாமரமாக வளர முடியும். மாங்கன்றுகளை நட்டு, பின் தண்ணீரே பாய்ச்சாமல் போனால், அவை செத்து போகும். நடவும் வேண்டும். தண்ணீர் பாய்ச்சவும் வேண்டும். அப்போதுதான் அது மரமாக வளர்ந்து, கனி கொடுக்க ஆரம்பிக்கும்.
.
கர்த்தருடைய ஊழியத்திலும் இரண்டு வகைகள் உண்டு. பவுல் சொல்வது போல நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார் என்பதை போல நடும் ஊழியம், நீர் பாய்ச்சும் ஊழியம். முதலாவது சபைக்கு வெளியே செய்யும் காரியம்- அது நடுவது. மற்றொன்று சபைக்கு உள்ளே செய்யும் ஊழியம் – நீர் பாய்ச்சுவது. பவுல் சபைக்கு வெளியே இருந்து, ஆத்துமாக்களை சபைக்கு கொண்டு வந்து நட்டார், அப்பொல்லோ அவர்களுக்கு வேதத்திலிருந்து சத்தியத்தை போதித்தார். அதாவது நீர் பாய்ச்சினார். இரண்டு ஊழியங்களுமே மிகவும் முக்கியம். ஆத்துமாக்களை சபைக்கு கொண்டு வந்தப்பின், அழுக்கான, ஆரோக்கியமில்லாத தண்ணீரை பாய்ச்சினால், அதனால் பயன் என்ன? நடாமல், தண்ணீர் பாய்ச்சுவதாலும் என்ன பயன்? ஆகவே சரியான முறையில் இந்த ஊழியங்களை செய்வது மிகவும் முக்கியமானது.
.
இந்நாட்களில் அநேக விசுவாசிகள் எந்த ஊழியத்தையும் செய்ய முன்வருவதில்லை. அவர்கள் சபையில் உட்கார்ந்து வசனத்தை கேட்கிறதையே விரும்புகின்றார்கள். வசனத்தை கேட்பது தவறு அல்ல, ஆனால் கேட்பதிலேயே உட்கார்ந்து, செயலாற்ற மறப்போமானால், நாம் கேட்டதினால் என்ன பயன்? ஒரு கால்பந்து போட்டி நடக்கிறது என்று வைத்து கொள்வோம். அதில் இருபது பேர் மிகவும் கஷ்டப்பட்டு விளையாடுவதை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து இரசித்து கொண்டிருக்கிறதை போலத்தான் இந்த நாட்களில் ஆலயங்களிலும் காணப்படுகிறது. அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை, சுகமாக உட்கார்ந்து விளையாடுவதை பார்த்து கொண்டிருப்பது போலத்தான் ஆலயத்திலும் சத்தியத்தை கேட்டு போகிறவர்களின் நிலையும் காணப்படுகிறது.
.
‘தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்’ என்று இயேசுகிறிஸ்து கூறினார். அறுவடைக்கு காத்திருக்கும் பயிர்கள் மிகுதி, ஆனால் அதை அறுப்பதற்கு ஆட்களோ இல்லை. அப்படிப்பட்ட நேரத்தில் அந்த கால்பந்து ஆட்டத்தை உட்கார்ந்து இரசித்து கொண்டிருப்பவர்களை போல நாமும் காணப்படுவோமானால் எத்தனை நிர்விசாரமானவர்களாய் காணப்படுவோம்! கர்த்தருக்கென்று எதையாவது செய்யும்படியாய் எழும்புவோம்! யார் தண்ணீர் ஊற்றுவது, யார் நடுவது என்பது பிரச்சனை அல்ல, யாராவது ஒரு காரியத்தை செய்யத்தான் வேண்டும். அது சுவிசேஷ ஊழியமாயிருக்கட்டும், அல்லது போதிக்கிற ஊழியமாயிருக்கட்டும், அல்லது ஆத்துமாக்களை சபையில் சேர்க்கிற காரியமாயிருக்கட்டும், எதையாவது நாம் செய்யத்தான் வேண்டும்!
.
ஒவ்வொரு கிறிஸ்தவரும் எழுந்து கர்த்தருக்காக எதையாவது செய்திருந்தால் இந்நேரம் நமது இந்தியா இரட்சிப்புக்குள்ளாய் வந்திருக்கும்! கர்த்தர் உங்களை நடும்படி சொன்னால் போய் நடும் வேலையை செய்யுங்கள், உங்களை தண்ணீர் பாய்ச்ச சொன்னால் அதை செய்யுங்கள். ஆனால் கர்த்தர் என்னை எதையும் செய்ய சொல்லவில்லை என்று சொல்லி, உங்களையே நீங்கள் ஏமாற்றி கொள்ளாதீர்கள். கர்த்தர் தாலந்துகள் இல்லாமல் யாரையும் உருவாக்கவில்லை!
.
ஒருவேளை படுத்த படுக்கையிலே இருந்தாலும் மற்றவர்களுக்காக ஜெபிக்கலாம், அநேக பரிசுத்தவான்கள் அந்த ஊழியத்தை உண்மையாக செய்திருக்கிறார்கள். மற்றவர்களுக்காக ஜெபிப்பது ஒரு ஊழியம்! எனக்கு கம்பியூட்டர் மாத்திரம் தான் தெரியும் என்றால் அதில் எத்தனையோ வழிகளை கர்த்தர் திறந்து வைத்திருக்கிறார். அவற்றை செய்யலாம்.
.
நாம் இருக்கும் இந்த காலம் சிந்திக்கும் காலம், செயல்படும் நேரம், உட்கார்ந்து வசனத்தை கேட்டு, சும்மா இருக்கும் காலம் அல்ல! செயலாற்றுவோம்! ஆத்துமாக்களை கொள்ளை பொருட்களாய் கர்த்தரிடத்தில் கொண்டு வருவோம். பரலோகத்தை ஆத்துமாக்களினால் நிரப்புவோம்! ஆமென் அல்லேலூயா!
இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மௌனமாய் இருக்காதே – நீ
மௌனமாய் இருக்காதே
அறுவடை காலத்தில் மௌனமாய் இருந்தால்
ஆத்துமா இழப்பாயே
ஆண்டவர் காலத்தில் மௌனமாய் இருந்தால்
இரட்சிப்புத்தான் வருமோ
இந்தியா இயேசுவை அறிந்திடும் காலம்
இதுதான் இதுதானே
இந்த காலத்தில் மௌனமாய் இருந்தால்
இரட்சிப்புத்தான் வருமோ
ஜெபம்
எங்களை நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, நாங்கள் எத்தனையோ காலங்களை உட்கார்ந்து வசனத்தை கேட்டு, ஆனால் கேட்ட வசனத்தை செயலாற்றாமல் இருந்து விட்டோம் ஐயா. தயவாய் மன்னியும். இனிவரும் நாட்களிலாவது தேவன் எங்களுக்கு பாரப்படுத்தும் ஊழியத்தை உண்மையாய் செய்ய எங்களுக்கு உணர்த்தும். செயல் வீரர்களாக, வீராகங்கனைகளாக, ஜெபிக்கிறவர்களாக, சபையில் ஆத்துமாக்களை நடுகிறவர்களாக, நீர் பாய்ச்சி, அவர்களை சத்தியத்திற்குள் நடத்துகிறவர்களாக எங்களை எடுத்து பயன்படுத்தும். எங்கள் ஒவ்வொருவருக்கும் ஆத்துமாக்கள் மேல் வாஞ்சையும், ஆத்துமாக்களை குறித்த பாரத்தையும் தாரும் ஐயா. நாங்கள் எங்கள் வேலைகளை ஒழுங்காய் செய்கிற போது நீர் அவர்களை கனி கொடுக்கிறவர்களாக மாற்ற போவதற்காக உமக்கு நன்றி. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.